இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு முன்னுதாரணமான கட்டிடங்களை உருவாக்கினார்.
அவர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் வலுவுடன் அவரது கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன. அவர் குறித்தும் அவரது கட்டிடக் கலை அனுபவங்கள் குறித்தும் அவரது மனைவி எலிசபெத் பேக்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் தான் “பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு”
நம்ம ஊர் சந்தையில் நூல் அறிமுகம்:
சூழலுக்கிசைவாய் மனித மனங்களை நகரச் செய்ய சந்தையில் புத்தகங்கள் வாயிலாகவும் வழி காணும் சிறு செயலாய் ,
இம்மாதம்
எலிசபெத் பேக்கர் எழுதி,
மருத்துவர்.வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்து
தடாகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள
“பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு”
புத்தகம்.
சூழலை அழிக்காமல் வாழ்விடத்தை உருவாக்கும் மரபுக் கட்டிடக்கலை பற்றிய புத்தகம்.
அறிமுகம் செய்பவர்
கு. பாலமுருகன், நூலகர்
GRD கல்லூரி.
புத்தக வாசிப்பாளர்கள், மரபுக் கட்டிடக்கலை பற்றி அறிய விரும்புவோர் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
நம்ம ஊரு சந்தை – Namma Ooru Sandhai