தற்சார்பு வாழ்வியலை நோக்கி

வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு

தற்சார்பு வாழ்வியலை நோக்கி அடுத்த அடி!

துணி துவைக்க ரசாயனம் கலந்த சோப்பு கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல். முடிந்த வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கப் பழகி வருகிறேன்.

இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.
பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.

செய்முறை:
தண்ணீர் 1 லிட்டர்
நாட்டு சர்க்கரை 100 கிராம்
எலுமிச்சை பழம் 3
ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி நூறு கிராம் நாட்டு சர்க்கரை கலந்து கண்ணாடி பாட்டிலில் மூடி வைக்கவும். தினமும் ஒரு முறை திறந்து மூடி வைக்கவும். ஏழு நாட்களில் தயாராகி விடும்.

ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்து துவைக்கலாம்.

 

துவைக்கும்போது நுரை வராது. எனவே தண்ணீர் குறைவாக செலவாகிறது.

நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். மிக்ஸியில் அரைக்கவில்லை. இப்போது பயன் படுத்துகிறேன். துவைக்கும் போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது.

இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்!

நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்! நம் ஒவ்வொருவரின் சிறிய ஆனால் சீரிய முயற்சி!

Saroja Kumar