தற்சார்பு விவசாயி-13 காற்றாடியின் விசையை கூட்டும் கருவி

காற்றாடியின் விசையை கூட்டும் கருவி
Agriwiki.in- Learn Share Collaborate

காற்றாடியின் விசையை கூட்டும் கருவி. தற்சார்பை நோக்கிய பயணத்தில், தோட்டத்தில் இருக்கும் காற்றாடியின் ஆற்றலை பெருக்கும் விதமாக ஒரு கருவியை சொந்தமாக யோசித்து, வடிவமைத்து ஊருக்கு அனுப்பியிருந்தேன். அந்த பதிவு நவம்பரில் வந்தது.

தொடர்ந்து "தற்சார்பு விவசாயத்தை" பற்றிய தொடரை எழுத முடியாமல் சில நாட்கள் தள்ளிப்போனது. அதற்கு பல்வேறு காரணங்கள்…

Posted by Alwar Narayanan on Monday, November 5, 2018

இது போய் சேர்ந்ததே ஒரு பெருங்கதை, அதன் பிறகு பல்வேறு தடங்கல்களுக்கிடையே அதை செவ்வனே நிறுவி தண்ணீரை வரவைத்தாகிவிட்டது. அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி.

இது என்ன ?
காற்றாடியின் விசையை கூட்டும் கருவி.

அப்படியென்றால் ?
ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம் 20000 முதல் 30000 வரை வரவைக்கலாம். படம் பார்க்கவும். முக்கால் இஞ்சி குழாயில் தாராளமாக தண்ணீர் கொட்டுகிறதல்லவா ?

வேறு ஏதாவது ?
250 அடி ஆழம் வரை போகலாம். ஏனென்றால் புட் வால்வின் எடையை இந்த சட்டம் தாங்குகிறது. கம்பியை, குழாயை நேராக வைத்திருக்கிறது. காற்றாடியின் ஓட்டம் இதனை பாதிப்பதில்லை. அதனால் பழுது படுவது குறைகிறது.

செலவு ?
ஒன்றுமில்லை. இதை வடிவமைக்க ஆகும் செலவுதான். ஓடுவதற்கு காற்றாடியின் விசைதான்.

எப்படி வேலை செய்கிறது ?
சுருக்கமாக சொன்னால் நெம்புகோல் தத்துவத்தை பயன்படுத்தி ஆற்றலை பெருக்குகிறது.

காற்றடிக்கு மேலும் பளு கூடுமா
இல்லை. குறையும். இதன் இன்னொரு பயன் காற்றாடி தூக்கவேண்டிய எடையை இது தூக்குவதால், காற்றாடி மேலும் எளிதாக சுழலும்.

இது யாருக்கு பயன்படும்.?
காற்றாடி உள்ளவருக்குத்தான். இப்படியும் செய்யமுடியும் என்று நிரூபணமாகிறது.

இதை நிறுவ என்னுடைய நண்பனுக்கு நம்பிக்கை வரவில்லை. அவரை பேசி பேசி பணிய வைப்பதே பெரும்பாடு. நான் அனுப்பிய லாரிக்காரனோ இதை எதோ ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டான். அதற்கு முன்பு அங்குமிங்கும் அலைக்கழித்து இறக்கினால் போதும் என்றாகிவிட்டது. அத்துவானத்தில் காட்டில் இறங்கியதால் போலீசிடம் மாட்டியது வேறே. என்னவென்று விளக்கம் சொல்வது. தோட்டத்துக்கு உண்டான சாதனம் என்றால் காட்டுக்குள் ஏன் இறக்கினாய் என்று கேள்வி. பேப்பர் கிடையாது.

இதனிடையே, காய்ச்சல், திருப்பதி தரிசனம், மழை, ஆட்கள் குறைவு, மாட்டும் இடத்தில் சிக்கல், சட்டம் சரியாக பொருந்தாமை என்று பல்வேறு சிக்கல்கள். அதற்கு சிகரம் வைத்தாற்போல, எல்லாம் கைகூடும்போது ஆழ்துளை கிணற்றுக்குள் தேனீ கூடுகட்டிவிட்டது. கவனியாமல் குழாயை எடுக்கும்போது நண்பனையும், கூட்டாளியையும் தேனீ பதம் பார்த்துவிட்டது. காட்டுத்தேனீ !

Posted by Alwar Narayanan on Sunday, February 17, 2019

 

Posted by Alwar Narayanan on Sunday, February 17, 2019

இப்போதைக்கு ஓடவிட்டாயிற்று. பழக பழக மேலும் இதனை திறன் மிக்கதாக மாற்றமுடியும்.

பிரயோசனம்  இருக்கிறதோ இல்லையோ. எதோ ஒரு சாதனை செய்ததுபோல திருப்தி.!.

One Response to “தற்சார்பு விவசாயி-13 காற்றாடியின் விசையை கூட்டும் கருவி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.