தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
by Pamayan
1. செடி நடுவதற்கு மட்டுமல்ல, அடிப்படை பயிர்கள் (நெல் வரகு சோளம், மரவள்ளி, போன்றவை) மற்றும் மரங்கள் (பழம், ஊர், மரம்) போன்ற வேளாண்மை திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
2. மண்ணுடன் உங்கள் பிணைப்பை விட்டுவிடாதீர்கள். உங்களுடையதாக இருந்தாலும் உறவினருடையதாக இருந்தாலும் சரி, ஏதாவது செயல் திட்டமாக இருந்தாலும் சரி, சமூகத் தோட்டமாகஇருந்தாலும் சரி நிலத்துடன் ஒரு பிணைப்பை உருவாக்குங்கள். படிப்படியாக நகரத்தை விட ஊரகப்பகுதிகளில் அதிக நேரம் செலவிட, இயற்கை கழிவுகளை மறுசுழற்சி செய்ய, இயற்கை மருத்துவம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள், படிப்படியாக கிராமங்களில் வாழும் மக்களுடன் கலந்து கொள்ளுங்கள்;
3. நடைமுறை திறன்கள் (சமையல், தச்சு, இயந்திரம் பழுது பார்த்தல், உணவு பதப்படுத்துதல், தையல், முதலியவற்றில் நடைமுறை திறன்களை வளர்த்துக்கொண்டு இந்த திறன்களை குழந்தைகள் மற்றும் நண்பர்கள், அண்டை அயலார் ஆகியோருக்குக் கற்றுக்கொடுங்கள்;
4. ஒருவருக்கொருவர் உதவிடும் நட்புக்குழுக்களுடன் இணைந்துகொள்ளுங்கள். அவர்கள் ஒருவருக்கொருவருடன் உதவிக்கொள்ள முடியும். இயற்கையாகச் செய்யக்கூடிய பழச்சாறு, பழக்கூழ், சுவைநீர், மூலிகை தேநீர், ஊறுகாய், வத்தல் போன்ற பதப்படுத்தும் நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள். இவற்றை தயாரித்து நேரடியாக சந்தைப்படுத்துங்கள்.
5. உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள், காலத்தையும் களத்தையும் மிச்சப்படுத்துங்கள்.முடிந்தவரை பணம் பயன்படுதல் செய்யும் பணிகளுக்கு பரிவர்த்தனைகளை முன்னுரிமை கொடுங்கள். உழைப்பு, உடற்பயிற்சி, கைவினை, கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களால் முடிந்த அனைத்தையும் பணமின்றி செய்யும் முறையை கண்டுபிடியுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
6. மேலும் மேலும் அதிகமாக நுகரும் நுகர்வு வெறியில் இருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பேசும் நுகர்வு வெறி ஆதரவாளர்களை புறந்தள்ளுங்கள். கைவினை அமைப்புகள், சிறு உற்பத்தி அமைப்புகள், சமூக உற்பத்தி நிறுவனங்கள், நியாய வணிக நிறுவனங்கள், சூழலை சிதைக்காத தயாரிப்பு அமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்.
7. திரும்ப முளைக்கும் விதைகள், உள்ளூர் தயாரிப்புகள் போன்றவற்றை பரிமாற்றம் செய்தல், சேமித்தல், பல்வகை பெருக்கி தமக்குள் பகிர்ந்து கொள்ளுதலை பரவலாக்குங்கள்.
8. இதற்குப் பிறகு வாழ்க்கை இனிதாக மாறும்! நாம் மாற்றத்தில் இருக்கிறோம்.
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.l