நிலாச்சோறு – மறந்துபோன கிராமிய விழா

நிலாச்சோறு  - மறந்துபோன கிராமிய விழா

நிலாச்சோறு  – மறந்துபோன கிராமிய விழா

பட்டிணிக்காக
ஒரு விழா இது ஒரு மறக்கமுடியாத திருவிழா

பங்களாபுதூர் என்ற சிறிய கிராமம் இங்கு விவசாய வேலைக்கு பஞ்சமில்லாத ஊர் மக்களுக்கு தினமும் வேலை இருக்கும் களையெடுக்க கரும்பு வெட்ட நெல் நடவு அறுவடை இப்படியாக பல்வேறு வகையான விவசாய வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

மக்களுக்கு குறைந்த சம்பளமாக இருந்தாலும் பசியற்று வாழ்ந்த ஊர்

நெல் அறுவடைக்கு நெல்தான் கூலியாக கிடைக்கும்

நெல் அறுவடைக்கு செல்லும் ஒரு கணவன் மனைவி வீட்டில் இரண்டு ஏக்கர் வயல் உள்ளவர்களிடம் எவ்வளவு நெல் மூட்டைகள் இருக்குமோ அவ்வளவு நெல்மூட்டை இருக்கும்
(இது கிட்டத்தட்ட 10 பொதியிலிருந்து 12 பொதி வரை இருக்கும்) இரண்டு ஏக்கர் சாகுபடி செய்பவருக்கு செலவு போக கிடைக்கும் நெல்மணி

இவர்கள் உணவுத் தேவைக்கு போக மீதியை அளந்து (விற்பனை செய்து) விடுவார்கள் வருடம் இரண்டு போகமும் அறுவடை பணி களை எடுக்கும் பணி விதைக்கும் பணி இப்படி வேலை இருந்து கொண்டே இருக்கும்

பொருளாதார மேதை ஐயா J.C. குமரப்பா அவர்கள் சொன்னது போல் தற்போதைய டிராக்டர் இயந்திரங்கள் வரவால் இத்தனை குடும்பங்களும் வேலை இழந்தது வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது வேறு கதை.

இப்படி விவசாய வேலைகள் முடித்தபின் வைகாசி,ஆனி மாதம் வாய்க்காலில் தண்ணீர் விட்டு நடவு பணி ஆரம்பம் ஆகும் முன் மக்களிடம் வேலையும் இருக்காது பணமும் இருக்காது இந்த சமயத்தில்தான் நிலாச்சோறு நிகழ்வுகள் நடக்கும் வரும் வைகாசி பௌர்ணமி
அந்த ஊரின் பெரிய மைதானத்தில் நிலாச்சோறு நடக்கும் .

அருந்தவச் செல்வம் என்ற மகான் ஒருவர் அவரது இனக்குழுக்களுக்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி குடியிருப்புக்காக கொடுத்துள்ளார்
இந்தப் பகுதிக்கு பண்ணாடி வீட்டு பட்டி என்று அழைக்கப்படும்
இங்கு 50 குடும்பங்களுக்கு மேல் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்
இந்தப் பகுதியில்தான் நிலாச்சோறு நடக்கும்

ஊரில் உள்ள அத்தனை நபர்களும் இந்த நிலாச்சோறு விழாவில் பங்கேற்பார் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி ,பருப்பு, தானிய வகைகள், எண்ணெய் , பால், தயிர் என அனைத்தும் அனைவரது வீட்டிலிருந்து கொண்டு வந்து சமையல் செய்யப்படும்.

இந்த விழாவில் பெரியவர் சிறியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்காது
இந்த விழா ஒரு வாரம் பத்து நாள் என தொடர்ந்து நடக்கும்.

இதில் பெரும்பாலானோர் சாப்பிடுவதற்காக மட்டுமே வருவார்கள்.

வருபவர்கள் அனைவருக்கும் பருப்பு போட்டு. சாதத்தில் பிசைந்து
நிலா கவளம் என்று கையில் உருட்டி தருவார்கள் குழந்தைகள் ஒரு கவளம் சாப்பிட்டாலே போதும் வயிறு நிறைந்து விடும் இதில் அவரை பருப்பு கட்டாயம் இருக்கும்

நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்

பெண்கள் அனைவரும் கும்மி பாடல் பாடி ஆடி மகிழ்வார்கள் தம்பி யன்ணன் என்பவரே பெரும்பாலும் பாடல்கள் பாடுவார்கள் அவர்கள் பாடலில் நான் மறக்க முடியாத ஒரு வரி “உட்கார்ந்து பால் கறக்க முக்காலி பொண்ன்லே” எனற வரிகள் ஊரின் செல்வசெழிப்பை பறை சாற்றுவதாய் இருக்கும்

ஆண்கள் அனைவரும் சமையல் வேலைகளில் இருப்பார்கள்
சமையல் முடிந்ததும் நிலாபிள்ளைக்கு படையலிட்டு வழிபாடு முடிந்தது அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கும்.

யாரும் வேலை இல்லாத நேரங்களில் கையில் பணம் இல்லாத நேரங்களில் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாக்கள்தான் நிலாச்சோறு நிகழ்வுகள் ஏற்பட்டது.

பத்தாவது நாள் 90% மக்கள் வெறும் கையோடு தான் வந்து சாப்பிட்டு போவார்கள்.

இன்று அப்படிப்பட்ட விழாக்கள் எதுவும் கிராமங்களில் நடப்பதில்லை நமது தொழில்நுட்ப வளர்ச்சியால் வழக்கொழிந்த விழாக்களில் நிலாச்சோறு விழாவும் ஒன்று.

வைகாசி பௌர்ணமியன்று வரும் நிலாச்சோறு விழா.

 

என்னை பற்றி சில வரிகள்
என் அப்பா வெங்கிடு அண்ணன் வீட்டு பையன் அல்லது கண்ணுச்சாமி என்றால் அனைவருக்கும் தெரியும்
வெ.லோகநாதன் நம்பியூர் பதிவு செய்த நாள் 3/06/2020
நிலாச்சோறு

5 Responses to “நிலாச்சோறு – மறந்துபோன கிராமிய விழா”

  1. எண்ணத்தில் உள்ளதை எழுத்தில் வடித்த விவசாயி லோகநாதனுக்கு வாழ்த்துக்கள் இது இயற்கையை மறந்த மனித குலம் மீதான ஆதங்க வெளிப்பாடு எழுத்தாணி இன்னும் நிறைய எழுதட்டும்

  2. மறநது போன பாரம்பரியம் அருமையான பதிவு

    1. அருமை லோகு அண்ணா

      உங்களுடன் என்றும்
      பட்டதாரியின் விவசாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *