நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு

நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு rammed earth house
Agriwiki.in- Learn Share Collaborate

நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு rammed earth house

மண் வீடு

இந்த வீடு பெங்களூர் ஆர்க்கிடேக்ட் சித்ரா விஸ்வநாத் அவர்களால் வடிவமைக்கப்பட்ட 1500 சதுர அடி கொண்ட rammed earth house.
((நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு))

இந்த வீட்டி சிறப்பு என்னவென்றால் 7 சதம் சிமெண்ட் மற்றும் செம்மண்ணை கொண்டு அழுத்தப்பட்டு வீட்டின் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

பூச்சு வேலை இல்லை

பெயிண்டிங் வேலை இல்லை..

நல்ல காற்றோட்டமான பெரிய பெரிய கதவுகள் மற்றும் ஜன்னல்கள்.

உயர்வான வரவேற்பறை.(heigh roof hall)

வீட்டின் கூரை சாதாரண rcc கான்க்ரீட் கூரை தான்.
(Filler slab பயன்படுத்தாது வருத்தம்.வீட்டின் சொந்தகாரர் விரும்பாமல் கூட இருந்திருக்கலாம்.தெரியவில்லை.)

கூரைக்கு (ceiling) பூச்சு வேலை இல்லை வண்ணம் கூட கொடுக்கப்படவில்லை.கூரையின் சென்றிங் கழட்டி எடுத்த பின்பு அப்படியே விடப்பட்டு உள்ளது.ஆனால் அதுகூட அழகாகவே கட்டம் கட்டமாக தெரிகிறது.

படிக்கட்டுகளுக்கு அதிக மெனெக்கெடல் இல்லை.எளிமை ஆனால் அழகு.

தரைக்கு ஏதோ wooden finishing tiles பயன்படுத்தி இருக்கிறார்.கொஞ்சம் சிமெண்ட் காரை தளமும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொடரும்..
ஹரி.