நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா

நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா

ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை…

ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா?…

விவசாயத்துக்கு பயன்படும் நிலத்தில் வீட்டுமனை போட கூடாது என்று உங்களுக்கு தெரியாதா?.அதை வாங்கி வீடு கட்டுவது தவறில்லையா??

நீங்க கட்டுறீங்களே வீடு அதுக்கு ஜல்லி,msand எங்க பாரின்ல இருந்தா வருது… நம்ம மேற்கு தொடர்ச்சி மலைல இருந்துதான் வருது…இப்பமலைகள் அழியாதா ?? …வனவிலங்குகள் பாதிக்காதா??

மனையில் கொஞ்சம் சுற்றியும் இடம் விட்டு வீடு கட்ட சொன்னா ஒரு பயலும் ஒரு இன்ச் கூட விடறதில்லை …கேட்ட போடா பைத்தியக்காரன்னு நம்மள சொல்றான்…ஏன் இவ்வளவு போக்குவரத்து வசதிகள் வந்த பிறகும் அந்த டவுன்லேயேதான் கொசுக்கடியில,சாக்கடை நாற்றத்திலேயேதான் தூங்கனுமா?…இல்லைனா தூக்கம் வராதா?…10 km தள்ளிதான் வாங்குறது…கொஞ்சம் இடம் விட்டுத்தான் கட்டுங்க…என்ன குடியா மூழ்கிடும்…அப்பறம் மூச்சு விட முடியலை புதுசு புதுசா நோய்னு வாங்கிட்டு ஆஸ்பத்திரி சரியில்லைன்னு சொல்றது.நம்ம உடம்புக்கு நாம்தானே முதல் மருத்துவர்…எப்போ புரியுமோ?

வீட்டுல பெய்யுற மழை தண்ணீரை எல்லாம் வீட்டை சுற்றி சிமெண்ட் காரை போட்டு மழைநீரை ரோட்டுல விடறது..ஒரு மழை பெய்தால் 10 லிட்டர் நீரையாவது சேமிக்க உங்களுக்கு நேரம் இருக்கா??…அப்புறம் குடிக்க கூட தண்ணி இல்லைனு போர் மேல போர் போடறது …பேசுற எவனாவது போர் போடாம இருக்கீங்களா …கேட்ட இவன்தான் நாட்டை காப்பாத்துரானாம்…((பியூஸும் போர் போட்டு இருக்கிறார்))
இப்போ கெடாதா இயற்கை…நீர்மட்டம்??

முதல்ல டவுன்ல இருக்குற ஒருத்தன் அவன் வீட்டு கழிவு நீரை ஒழுக்கமா மறுசுழற்சி செய்றீங்களா? அப்படியே சாக்கடையில் விட்டுவிடுவது.அப்புறம் சாக்கடை எங்க போகும் லூசுகளா பக்கத்து நாட்டுக்கா போகும்…ஆத்துல போய் கடல்ல தான் கலக்கும்…

(((இதுல கூவம் ஆற்றை சுத்தம் செய்ய வருஷம் 2000 கோடி…😂😂😂…சுத்தம் செய்வது என்பது முதலில் அசுத்தம் செய்யாமல் இருப்பது என்பதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை..)))

புதுமாடல் பைக்கில் இருந்து நாம் போடும் செருப்பு வரை எந்த ஒரு பொருளும் இயற்கையை அழிக்காமல் வரவில்லை…ஆனால் அதற்கென்று ஒரு அளவு,அடிப்படை தேவை ,என்று ஒன்று இருக்கிறது.அதைதெரிந்து அதிகம் பாதிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்…நமக்கு இன்னும் பிளாஸ்டிக் கவரை ஒழிக்கவே மனம் இல்லை…

இதெல்லாம் பண்ணாத எவனாவது இருந்தா நீங்க ஜக்கிய இல்லைனா அரசியல்வாதிய திட்டுங்க …நிச்சயமா ஏத்துக்கலாம்…

உங்க பொலப்புக்கு நீங்க ஒருவிஷயம் பண்ணா அதுசரி ,வேறு வழி இல்லை என்று மனசை தேற்றிக்கொள்வதும்,
அடுத்தவன் செய்தால் முகநூலில் பொங்கி எழுவதும் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.நானும் பேசியவன்தான்.நானே யோக்கியன் இல்லை. அப்புறம் எங்கே அரசியல் வாதிகளை குறை சொல்ல அதுதான் பதிவுகளை நிறுத்தி விட்டேன்.

அதையும் மீறி இல்லை நான் செய்வதெல்லாம் சரிதான் அவர்கள் செய்வதுதான் தவறு என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் இது வீண் விளம்பரத்திற்கான அல்லது பொறாமைக்கான கூச்சலன்றி வேறொன்றும் இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அடுத்தவன் மீது நாம் காட்டும் விரலை நம் மீது ஒருவர் காட்டினால் நிச்சயம் கோவம் வரும்.வந்தாலும் உண்மை என்றும் உண்மைதான்.

மற்றும் இந்த பதிவு யாரையாவது புண்படுத்தினால் நிச்சயம் நான்…வருத்தப்படவில்லை

நன்றி
ஹரி

2 Responses to “நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா”

  1. உண்மையை உரக்க சொன்னிர்கள்! சமீபகாலமாகத்தான் உங்களைப்போல் பக்குவப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நன்றி நண்பரே! உங்களின் கட்டுரைகளும், தகவல்களும் மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *