நீர் மேலாண்மை என்றால் என்ன

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
நீர் மேலாண்மை என்றால் என்ன?

மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?

இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.
இதை ஒரே நாளில் தெளிவாக சொல்லி விட முடியாது. எனவே முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன்.

எல்லோரும் நீர் மேலாண்மை என்றால் பண்ணைக் குட்டை அமைப்பது, நிலத்தைச் சுற்றி அகழி எடுப்பது, நிலத்தில் கரைகள் இடுவது, பின்னர் ஊருக்கு ஊர் குளங்கள், வாய்க்கால்களை வெட்டுவது, ஏரிகள் அமைப்பது என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதனால் பலன் மிகவும் குறைவே.

இயற்கையிலியே பூமியில் அருவிகள், சிற்றோடைகள், குளங்கள், ஆறுகள் என்று தேவைக் ஏற்ற தகவமைப்புகள் அனைத்தும் மிகச் சரியாகவே உள்ளன.

சரி இப்போது பண்ணைக் குட்டைகள் அமைத்தாலும் மழை பெய்து ஓரிரு நாட்களில் தண்ணீர் வற்றி விடுகிறது. ஏதோ கொஞ்சம் சேமிக்கிறோம்தான். ஆனால் இது சரியான முறையா?

காடுகளும் மலைகளும்தான் உண்மையான மழைநீர் சேகரிப்பு மையங்கள்! அவற்றை அழித்து, எவ்வாறு நாம் மழைநீர் சேமிக்க முடியும்? ஆறுகள் எங்கே உற்பத்தியாகின்றன? மலைகளில்! ஆனால் அங்கே அது சிறு ஓடை தான். காடுகள் வழியே பாய்ந்து வரும்போது ஏராளமான சிற்றோடைகள் இணைந்து நதியாக மாறுகிறது. ஆறுகளில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டுமானால் பூமியெங்கும் காடுகள் இருக்க வேண்டும். மாதம் மும்மாரி பெய்ய வேண்டும்.

இதை விடுத்து பண்ணைக் குட்டை வெட்டி வைத்தால் இரண்டு நாட்கள் தண்ணீர் நின்று காய்ந்து விடும். இதில் எவ்வளவு தண்ணீர் பூமியில் இறங்கும்? அடிக்கிற வெயிலுக்கு இந்த குட்டையில் நிக்கற தண்ணீர் எத்தனை நாள் தாங்கும்?

நாம் ஆயிரம் அடிகள் வரை போர் போட்டு வருடம் முழுவதும் எடுக்கும் தண்ணீரின் முன்பு இந்த சேமிப்பு மிக மிகச் சிறிய அளவே!

தொடரும்!
From facebook – saroja kumar