பட்டம் பார்த்து பயிர் செய்

பட்டம் பார்த்து பயிர் செய்
பட்டம் பார்த்து பயிர் செய்

 

பட்டம் பார்த்து பயிர் செய்தால் அந்த பயிருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலை/காலநிலை காற்றோட்ட நிலை இருக்கும் எனவே அதிக மகசூலை அது கொடுக்கும். அதனால் அதிக மகசூலை ஒரு தாவரம்/பயிர் நன்றாக வளர்ந்து கொடுக்கும் காலத்தை பட்டம் என்று கூறலாம்.

இயற்கை விவசாயம் , பட்டம், மாதம், பட்டம் தவறுவது பற்றி அறிந்த தகவலை பகிர்கின்றேன்…..

யாரையும் de motive பன்னுவதற்கு சொல்லவில்லை, யாரேனும் “நஷ்டம் அடையக்கூடாது ” என்று பகிர்கிறேன்….

ஆசிய கண்டத்தில் உணவுக்காக அதிகம் பயன்படுத்த படுவது நெல். ஒரு சிறய அலசலாக கீழே பார்ப்போம் பட்டமும் மாதமும், பட்டமும் நெல்லும்

பட்டத்தை சம்பா பட்டம், குருவை பட்டம், நவரை பட்டம், கார் பட்டம், தாளடி , சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா , சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை பட்டம் என்று பலவிதமாக பிரித்து மாதத்தை பட்டத்துடன் தொடர்புபடுத்தினர்.

பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று.. இதை
நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து சென்ற இயற்கை யுடன் வாழ்ந்த விவசாயத்தை செய்ய மறுக்கின்றனர். அது ஒரு புறம் இருக்கட்டும்… பட்டத்துக்கு வருவோம்.

பட்டத்தை சம்பா பட்டம், குருவை பட்டம், நவரை பட்டம், கார் பட்டம், தாளடி , சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா, சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை பட்டம் என்று பலவிதமாக பிரித்து மாதத்தை பட்டத்துடன் தொடர்புபடுத்தினர்.

பட்டமும் மாதமும்:

 

சொர்ணவாரி : சித்திரை – ஆடி (ஏப்ரல் 15 – ஆகஸ்டு 14)

சம்பா : ஆடி – மார்கழி ( ஜூலை 15 – ஜனவரி 14)

பின்சம்பா : புரட்டாசி – தை ( செப்டம்பர் 15 – பிப்ரவரி 14)

நவரை : மார்கழி – மாசி ( டிசம்பர் 15 – மார்ச் 14)

குருவை : நடு வைகாசி – நடு ஆவணி (ஜூன் 1 – ஆகஸ்டு 31)

நெல்லுக்கு உகந்த பட்டமான
சம்பா பட்டத்தை ஆடிபட்டம் தேடி விதை என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள்
இந்த பழமொழி அனைத்து விதைக்கும் பொருந்தும் இதையே மாதத்துடன் தொடர்பு படுத்தினர்.

அது  சரி பட்டம் என்றால் என்ன?

அதிக மகசூலை ஒரு தாவரம்/பயிர் நன்றாக
வளர்ந்து கொடுக்கும் காலத்தை பட்டம் என்போம்.

அந்த பயிருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலை/காலநிலை ,காற்றோட்ட நிலை இருக்கும் போது அதிக மகசூலை அது கொடுக்கும், அதை அந்த பயிருக்கு ஏற்ற பட்டம் என்போம்.

நெல்லுக்கு ஏற்ற பருவம் முக்கியமாக சம்பா, ஏனெனில் நெல்லுக்கு தேவையானது
அதிக தண்ணீர், வெயில் மற்ற பயிரை காட்டிலும்
இது இயல்பாக மழைக்காலத்தில் கிடைக்கும்

இதனால் பரவலாக தண்ணீர்/மழை தட்டுப்பாடு இல்லாத அனைத்து விவசாய நிலங்களிலும் நெல் பயிர் இடப்படுகிறது.

பட்டமும் நெல்லும்:

நமது முன்னோர்கள் அனுபவ விவசாயிகள் அதனால்தான் நெல்லின் பெயரை பட்டத்தின் பெயருடன் சேர்த்தார்கள் பட்டம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும் என்று
எடு.கா:
சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டு சம்பா,கிச்சலி சம்பா,தங்க சம்பா, கருடன் சம்பா….. இன்னும் பல சொல்லாம்.

அது போல குருவை நெல்

அறுபதாம் குருவை , கருங்குருவை….. என்றும்.

அதற்காக சம்பா என்று பெயர் வராத நெல் பெயர் சம்பா பட்டத்திற்கு உகந்து அல்ல என்று அர்த்தமில்லை.

பெரும்பாலும் நமது முன்னோர்கள் நெல்லை வருடத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் செய்தனர். நெல் அறுவடை முடிந்து பயிரு வகை பயிர்களை பயிர் செய்தனர். பிறகு சில மாதங்கள் விவசாய மண்ணை எந்த பயிர் செய்யாமல் விட்டனர்.

அந்த காலத்தில் மண் சூரிய ஒளியிலுருந்தும், வளி மன்டலத்திலிருந்தும் நேரடி தொடர்பில் அதற்கு தேவையான சத்துக்களை எடுத்து கொண்டு அடுத்த பட்டத்திற்கு தயாராகும்..

அந்த தயாராகும் காலத்தில் ஆடுகளையும் , மாடுகளையும் மேய்த்தனர். அந்த நிலத்தில் உள்ள தாவரத்தையும், தாவர கழிவுகளை உண்ட விலங்குகள் அங்கேயே கழிவுகளை இட்டன…..அதுவே அது மண்ணிற்கு உரமாக மாறியது.

இதையே நமது முன்னோர்கள் வழி வழியாக செய்தனர்.

விவசாயகளே கொஞ்சம் கவனியுங்கள் !!!!

நாம் செய்யும் விவசாயம் இயற்கையானதா
என்று சொல்லுங்கள் !!!!

இரசாயன விவசாயம் மனித உடலுக்கு கேடு என்று உலகம் முழுவதும் பறை சாற்றுங்கள் !!!!

இதனால் நமது முன்னோர் செய்த விவசாயத்தை திரும்பி பாருங்கள் !!!!

இதுவே நமது இவ்வுலக இன்பமான நோயற்ற வாழ்விற்கு உகந்தது என்று கூறுங்கள் !!!!

இயற்கையான விவசாயத்தை தொடங்குங்கள், தொடங்குங்கள் !!!!

அவ்வழியே தொடருங்கள், தொடருங்கள் !!!!

இயற்கை விவசாயம் என்பது
கேட்பதற்கு, பார்ப்பதற்கு, சொல்வதற்கு, படிப்பதற்கு மனதற்கு இனிப்பாக இருக்கும் செய்யவேண்டும் என்று அதை செயல்வடிவம் கொடுத்து பொருளாதர ரீதியாக (ஏற்ற/இறக்க) சரிசெய்து நடைமுறை செய்வது என்பது கொஞ்சம் கடினம்.

இதில் உள்ள சாதக பாதகங்களை அறிந்து இயற்கை விவசாயத்தையும் அதை சார்ந்த
தொழிலையும் செய்யவேண்டும்.

இயற்கை விவசாயத்தையும் அதை சார்ந்த தொழிலை செய்யும் நண்பர்கள் சொல்லிய வாசகம் இங்கு குறிப்பு இடுகிறேன்….

“இது ஒரு போதை போன்றது, இதை எங்களால் விடவும் முடியவில்லை, சரியான முறையில் தொடரவும் முடியவில்லை ”

அனைத்துக்கும் காரணம்  இதனால் ஏற்படும் பொருளாதார ஏற்ற, இறக்க தாழ்வுகளே.

இயற்கை விவசாயம் செய்யும் போது உங்களிடம் உள்ள அனைத்து நிலத்தையும் முதலில் முழுவதுமாக இயற்கை விவசாய த்திற்கு மாற்ற முயல்வது தவிர்க்க பட வேண்டும்.

இரசாயன விவசாயம் நமது உடலில் inject பன்னப்பட்டுள்ளது. இதிலிருந்து படிப்படியாக தான் நாம் மாற முடியும்.

அது மட்டும் அல்லாமல் அதிக லாபம் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து , ‘அனுபவம் இல்லாமல்’, நேரடியான கவனம் இல்லாமல், கையில் உள்ள முழு bank balance யும், ‘மிகுந்த ஆர்வத்துடன் செலவு செய்து’ விளையாவிட்டாலும் அல்லது சரியான முறையில் விளைவித்த பொருளை சந்தை படுத்த முடியாத நிலயில் நமக்கு நஷ்ட்டத்தை தரும் . இது தவிர்க்க பட வேண்டும்.

சரியானயான முறையில் திட்டமிட்டு, மிகவும் நிதானமாக செயல்படுத்தபட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முழு ஆதருவுடன் செயல்படுத்த படவேண்டும்.
“விவசாயிகள் ஒரு குழுவாக ஒத்த மனதுடன் செயல்பட்டாலும் வெற்றி நிச்சயம்.”

தாய்மண்:

அனைத்து வகை உயரின் உடலும் மண்ணிலிருந்து வந்தது.. முடிவில் மண்ணிற்கு சொந்த மாகிறது.

ஆதியும் அந்துமும் ஆகிய இந்த மண்ணை தாயுடுன் ஒப்பிட்டு “தாய்மண்” என்றோம்.

தாயிற்கு விஷத்தை யாரேனும் கொடுப்போமா????

கண்டிப்பாக இல்லை இல்லை…..

தாயாகிய இந்த மண்ணை இயற்கையின் சூழலில் பாதுகாப்போம். அதனுடன் இயற்கை விவசாயத்தையும்
வளர்ப்போம்.

“பட்டம் பார்க்கா பயிர் பாழ்” என்ற பழமொழிக்கேற்ப …பட்டத்தில் பயிர் செய்வோம்.

மேலும் படிக்க

 

இயற்கை விவசாயம்
சுரேஷ்குமார்
விருத்தாசலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *