பத்திலை கசாயம் செய்வது எப்படி?
பத்திலை கசாயம் செய்ய தேவையான பொருட்கள்
200 லிட்டர் தண்ணீர்
20 லிட்டர் நாட்டுபசு கோமியம்
2 கிலோ புதிய பசுஞ்சாணம்சேர்த்து கலக்கவும்
500 கிராம் மஞ்சள் தூள்சேர்க்கவும்
500 கிராம் இஞ்சி விழுது
20 கிராம் பெருங்காயததூள்
அவற்றை குச்சியால் வலஞ்சுழியாக நன்கு கலக்கவும். அதை கோணிப்பையால் முடி இரவு முழுவதும் வைக்கவும்.
அடுத்த நாள் காலையில்
1 கிலோ புகையிலைத் தூள்
1 முதல் 2 கிலோ காரமான பச்சை மிளகாய் விழுது
500 கிராம் நாட்டுப் பூண்டு விழுது
போன்றவற்றை தயாரித்துள்ள கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கி சாக்குப் பையால் மூடி ஒரு இரவு அப்படியே வைக்கவும், அடுத்தநாள் காலையில் அதை நன்கு கலக்கி அதனுடன்
2 கிலோ நறுக்கிய வேம்பு இலைகள் அல்லது முழு வேப்பங்கொட்டைத் தூள்
2 கிலோ நறுக்கிய புங்கன் இலைகள்
2 கிலோ நறுக்கிய சீதாப்பழ இலைகள்
2 கிலோ நறுக்கிய கிலோ ஆணக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய ஊமத்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய வில்வ இலைகள்
2 கிலோ நறுக்கிய துளசி இலைகள்
2 கிலோ துலுக்க சாமந்தி செடி முழுவதும்
2 கிலோ நறுக்கிய மா இலைகள்
2 கிலோ நறுக்கிய பப்பாளி இலைகள்
2 கிலோ நறுக்கிய இஞ்சி இலைகள்
2 கிலோ நறுக்கிய மஞ்சள் இலைகள்
2 கிலோ நறுக்கிய பாக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய காப்பி இலைகள்
2 கிலோ நறுக்கிய மிளகுகொடி இலைகள்
2 கிலோ நறுக்கிய பட்டைஇலைகள்
2 கிலோ நறுக்கிய கொய்யா இலைகள்
2 கிலோ நறுக்கிய உண்ணிச் செடி இலைகள்
2 கிலோ தகர இலைகள்
2 கிலோ இலந்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய செம்பருத்தி இலைகள்
2 கிலோ நறுக்கிய அரளி இலைகள்
2 கிலோ நறுக்கிய மருத இலைகள்
இவற்றில் முதல் 8 இலைகள் மிக முக்கியமானவை, மொத்தம் 10 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலைகளை ஏற்கனவே கரைசல் தயாரித்துள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி போட்டு கோணிப்பையால் கட்டி வைக்கவும், காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும்,
குறைந்தது 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நிழலில் வைக்கவும்.
30 நாட்கள் கழித்து துணியால் வடிகட்டி நிழலில் சேமித்து வைக்கவும். இதை 6 மாதம் வரை பயன்படுத்தலாம்,
எதற்கு பயன்படுத்தலாம் ?
இது சாறு உறிஞ்சும் மற்றும் பிற பூச்சிககளை நன்கு கட்டுப்படுத்தும்,
தெளிக்கும் முறை
100 லிட்டர் தண்ணிரில் 3 லிட்டர் பத்திலைக் கசாயம் கலந்து பயன்படுத்தலாம் அல்லது
15 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி. பத்திலைக்கஷாயம் கலந்து பயன்படுத்தலாம்.
பிரிட்டோ ராஜ்