பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு

பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு
Agriwiki.in- Learn Share Collaborate

பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வழி வேளாண்மையின் தீர்வு —

நாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி விவசாயம், காடு வளர்ப்பு, இயற்கை வளம் காப்பது மூலம் கணிசமாக பருவ நிலை மாற்றத்தை குறைக்க முடியும். 52 கிகா டன் கரியமில வாயு ( மொத்த வருடாந்திர உலகளாவிய வாயு உமிழ்வு) அனைத்தையும் நிலத்தில் நிறுத்த முடியும்.

ஆனால் உலகில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் விவசாயம், தீர்வுகளின் பகுதியாக இல்லை; அதற்கு பதிலாக, பிரச்சினை பகுதியாக உள்ளது. காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கு மாறாக,ரசாயன உர பயன்பாட்டால் நைட்ரஸ் ஆக்சைடு (N2O), கால்நடை மற்றும் நெல்லின் தீவிர உற்பத்தி மீத்தேன் (CH4) வெளியீட்டை அதிகரித்துள்ளது.

உணவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி உற்பத்தி, போக்குவரத்து, குளிர்பதன மற்றும் கழிவு அகற்றல் உள்ளிட்ட செயல்களால் மொத்த வருடாந்தர உலக கரிம வாயு உமிழ்வுகளின் 30% அளவை நவீன வேளாண்மை வெளியிடுகிறது. கரிம மாசுபாட்டிலிருந்து ஒரு கரிம தேக்கியாக வேளாண்மையை மாற்றுவது பருவ நிலை மாற்றத்தை குறைக்க ஒரு சிறந்த வழி.

பசுமை மூடாக்கு பயிர்கள், களை செடி மூடாக்கு, இயற்கை உரம் , பயிர் சுழற்சி மற்றும் இயற்கை வழி வேளாண்மையில் இதுவரை பரவலாகப் பயன்படுத்தப்படாத உழவில்லா வேளாண்மை( தோப்பு, கீரை, காய்கறி வளர்ப்பு போன்ற வேளாண்மையில் பயன்படுத்தலாம்), இதனுடன் மரபு முறை மண் சார்ந்த கால்நடை வளர்ப்பு, நிலத்தின் ஒரு பகுதியை காடாக விடுதல், பல வகையான மரம் வளர்ப்பு என செலவு குறைவான பருவ நிலை மாற்றத்துக்கான தீர்வு இயற்கை வழி வேளாண்மையிலும் பல்லுயிர் பேணுதலிலும் உள்ளன. இலவசமாக நஞ்சில்லா உணவும் படைக்க படும், தற்சார்பு வாழ்வு எனும் கனவும் ஓரளவுக்கு மெய்ப்படும்.

சிறு இயற்கை வேளாண்மை பண்ணைகள் மூலமே இது சாத்தியம் ஆகும். இதையும் பெரிய அளவில் செய்தால் இதை விட பெரிய முட்டாள்தனம் இல்லை.

இதுவே நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் மிக பெரிய உதவி, நமது சாப விமோசனம்.

Information from Rodale Institute.