பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்

பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்

பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்

நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்)

200 லிட்டர் தண்ணீர்
10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம்
2 கிலோ மாட்டு சாணம்
10 கிலோ வேப்பிலை (நறுக்கியது)

ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வலஞ்சுழியாக மரக்குச்சியால் நன்றா கலக்கி கோணிப் பையால் மூடிவைக்கவும், 48 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திடுங்கள் சூரிய ஒளியும், மழை நீரும் படுவதை தவிர்க்கவும், தினமும் காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும் 48 மணி நேரத்திற்கு பிறகு நீம் அஸ்திரம் பயன்படுத்த தயாராகிவிடும். துணியால் நன்கு வடிகட்டி நிழலில் வைக்கவும். இதை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்கள்

நீமாஸ்திரம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் இலை தத்துப்பூச்சி, அஸ்வினி, வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதன் மூலம் பூச்சிகள் கொல்லப்படுவதிலை பூச்சிகள் வேம்பு வாசனையை நுகர்ந்தவுடன் செடியில் இருந்து விலகிச் சென்றுவிடுகிறது, இது பூச்சிக்கொல்லி அல்ல இது பூச்சி விரட்டியாகும்.

பயன்படுத்தும் முறை – 200 லிட்டர் நீமாஸ்திரம் ஏக்கருக்கு அப்படியே தெளிக்க வேண்டும். இதை தண்ணீருடன் கலக்கக்கூடாது.

நீமாஸ்திரம் சிறு புழுக்களை கட்டுப்படுத்தும் ஆனால் பெரிய புழுக்களை கட்டுப்படுத்தாது.

பெரிய புழுக்களையும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத் மற்றொரு மருந்து உள்ளது அது பிரம்மாஸ்திரம் ஆகும்.

பிரம்மாஸ்திரம்

20 லிட்டர் நாட்டு பசு மூத்திரம்
2 கிலோ வேம்பு இலை விழுது
2 கிலோ புங்கன் இலை விழுது.
2 கிலோ சீதாப்பழம் விழுது
2 கிலோ ஆணக்கு விழுது
2 கிலோ ஊமத்தை விழுது

ஒரு பாத்திரத்தில் கோமியத்துடன் இவற்றை கலந்து நன்றாக வலஞ்சுழியாகக் கலக்குங்கள் மிக்சர் கிரைண்டர் பயன்படுத்த வேண்டாம், அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்தவும், தட்டால் மூடி மெல்லிய வெப்பத்தில் கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்தது இறக்கி வைத்து 48 மணிநேரம் அப்படியே குளிர விடுங்கள், காலையும் மாலையும் ஒருநிமிடத்திற்கு வலசுழியாக கலக்குங்கள் 48 நேரத்திற்கு பின்பு துணியால் வடிகட்டி சேமித்து வைத்திடுங்கள்.

6 மாதகங்கள் வரை இதை பயன்படுத்தலாம். பிரம்மாஸ்திரம் சாறு உறிஞ்சம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், 100 லிட்டர் தண்ணிருடன் 3 லிட்டர் பிரம்மாஸ்திரம் கலக்கி பயன்படுத்த வேண்டும். இதே விகிதத்தில் பயன்படுத்தலாம்.

பிரம்மாஸ்திரம் பயன்படுத்தி ஒளிந்திருக்கும் காய்புழு, தண்டுப்புழு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது, இதற்காக மற்றொரு கரைசல் உள்ளது அது அக்னி அஸ்திரம்

அக்னி அஸ்திரம்

20 லிட்டர் கோமியம்
2 கிலோ வேப்பிலை அரைத்த விழுது
500 கிராம் புகை இலைத்தூள்
500 கிராம் மிளகாய் காரமான விழுது
250 கிராம் நாட்டு பூண்டு விழுது

ஒரு பாத்திரத்தில் கோமியத்துடன் மேற்கண்டவற்றை சேர்த்து நன்கு வலஞ்சுழியாக கலக்கவும். அதனை தட்டால மூடி மிதமான நெருப்பில் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிடவும் அதன்பின் 48 மணிநேரம் நிழலில் குளிரவைக்கவும்.

தினமும் காலையும் மலையும் ஒரு நிமடத்திற்கு வலஞ்சுழியாக கலக்கவும். 48 மணி நேரத்திற்குபின் துணியால் வடிகட்டி சேமித்து வைக்கவும்.

இது மிகச்சிறந்த வீரியமான பூச்சிவிரட்டியாகும். இதை 3 மாதம் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

இக்கரைசல் சாறு உறிஞ்சும் பூச்சி, புழுக்கள் அனைத்தையும்  இது கட்டுப்படுத்தும். 100 லிட்டர் தண்ணிரீல் 3 லிட்டர் அக்னி அஸ்திரம் கலந்து அல்லது 15 லிட்டர் தண்ணிரில் 500 மில்லி அக்னி அஸ்திரம் கலந்து பயன்படுத்தவவும்.

பத்திலை கசாயம்

200 லிட்டர் தண்ணீர்
20 லிட்டர் நாட்டுபசு மூத்திரம்
2 கிலோ புதிய பசுஞ்சாணம்சேர்த்து கலக்கவும்
500 கிராம் மஞ்சள் தூள்சேர்க்கவும்
500 கிராம் இஞ்சி விழுது
20 கிராம் பெருங்காயததூள்

அவற்றை குச்சியால் வலஞ்சுழியாக நன்கு கலக்கவும். அதை கோணிப்பையால் முடி இரவு முழுவதும் வைக்கவும்.

அடுத்த நாள் காலையில்
1 கிலோ புகையிலைத் தூள்
1 முதல் 2 கிலோ காரமான பச்சை மிளகாய் விழுது
500 கிராம் நாட்டுப் பூண்டு விழுது
போன்றவற்றை தயாரித்துள்ள கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கி சாக்குப் பையால் மூடி ஒரு இரவு அப்படியே வைக்கவும், அடுத்தநாள் காலையில் அதை நன்கு கலக்கி அதனுடன்

2 கிலோ நறுக்கிய வேம்பு இலைகள் அல்லது முழு வேப்பங்கொட்டைத் தூள்
2 கிலோ நறுக்கிய புங்கன் இலைகள்
2 கிலோ நறுக்கிய சீதாப்பழ இலைகள்
2 கிலோ நறுக்கிய கிலோ ஆணக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய ஊமத்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய வில்வ இலைகள்
2 கிலோ நறுக்கிய துளசி இலைகள்
2 கிலோ துலுக்க சாமந்தி செடி முழுவதும்
2 கிலோ நறுக்கிய மா இலைகள்
2 கிலோ நறுக்கிய பப்பாளி இலைகள்
2 கிலோ நறுக்கிய இஞ்சி இலைகள்
2 கிலோ நறுக்கிய மஞ்சள் இலைகள்
2 கிலோ நறுக்கிய பாக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய காப்பி இலைகள்
2 கிலோ நறுக்கிய மிளகுகொடி இலைகள்
2 கிலோ நறுக்கிய பட்டைஇலைகள்
2 கிலோ நறுக்கிய கொய்யா இலைகள்
2 கிலோ நறுக்கிய உண்ணிச் செடி இலைகள்
2 கிலோ தகர இலைகள்
2 கிலோ இலந்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய செம்பருத்தி இலைகள்
2 கிலோ நறுக்கிய அரளி இலைகள்
2 கிலோ நறுக்கிய மருத இலைகள்

இவற்றில் முதல் 8 இலைகள் மிக முக்கியமானவை, மொத்தம் 10 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இலைகளை ஏற்னவே கரைசல் தயாரித்துள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி போட்டு கோணிப்பையால் கட்டி வைக்கவும், காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும், குறைந்தது 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நிழலில் வைக்கவும்.

30 நாட்கள் கழித்து துணியால் வடிகட்டி நிழலில் சேமித்து வைக்கவும். இதை 6 மாதம் வரை பயன்படுத்தலாம், இது சாறு உறிஞ்சும் மற்றும் பிற பூச்சிககளை நன்கு கட்டுப்படுத்தும், 100 லிட்டர் தண்ணிரில் 3 லிட்டர் பத்திலைக் கசாயம் கலந்து பயன்படுத்தலாம் அல்லது 15 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி. பத்திலைக்கஷாயம் கலந்து பயன்படுத்தலாம்.

வேம்பு பூச்சு

50 லிட்டர் தண்ணிர்
20 லிட்டர் கோமியம்
20 கிலோ சாணம்
200 கிராம் மஞ்சள் தூள்
10 கிராம் பெருங்காயத் தூள்
10 கிலோ வேம்பு இலை விழுது

இவற்றை ஒன்றாகக் கலந்து 48 மணி நேரத்திற்கு அப்படியே நிழலில் வைக்கவும். தினமும காலையும் மலையும் நன்கு கலக்கவும், தயாரான பிறகு பழமரங்களில் தண்டில் தடவவேண்டும்.

6 மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம், எனினும் உடனே பயன்படுத்துவது சிறந்தது.

வருடத்திற்கு 4 முறை பழமரங்களின் தண்டின் மேல் பூச வேண்டும்.

1. மே கடைசி வாரம் / ஜீன் முதல் வாரம் (கிருத்திகை)
2. செப் கடைசி வாரம் / அக்டோபர் முதல் வாரம்
3. டிசம்பர் கடைசி வாரம் / ஜனவரி முதல் வாரம்
4. மார்ச் கடைசி வாரம் / ஏப்ரல் முதல் வாரம் (தமிழ் புத்தாண்டு)

வேம்பு பூச்சு பழமரத்தின் தண்டின் மீது தடவும் போது பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலில் இருந்து காக்கிறது. இதனால் பட்டை வெடிப்பது தடுக்கப்படுகிறது, (கம்மோசிஸ்) பிசின் நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. வேப்பம் பூச்சு நோய்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

பூச்சி மருந்துகளை எப்போது தெளிக்க வேண்டும்?

தினந்தோறும் பயிரைப் பார்த்து அதில் முட்டைகளைப் பார்த்த உடனே பூச்சிவிட்டி தெளிக்க வேண்டும். முட்டைகள் இல்லாவிட்டால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டாம்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம் – 8300093777
07.02.2019 / Noon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *