பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

Agriwiki.in- Learn Share Collaborate
*பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் !!*

விவசாயிகளின் பெரிய பிரச்சனையாக இருப்பது பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்.

இதனால் மகசூல் குறைந்து, அதிக லாபம் பெற முடியாமல் உள்ளனர்.

எனவே பயிர்களில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி* :

🐛 இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தௌpக்க வேண்டும்.

*இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடீனியா :*

🐛 இதனை தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லியும் சேர்த்து தௌpக்க வேண்டும்.

*நெல் குலை நோய் :*

🍂 வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 300 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

*பாக்டீரியா, பூஞ்சாணம் :*

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தௌpக்கலாம்.

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தௌpக்கலாம்.

*சாறு உறிஞ்சும் பூச்சி :*

🐛 இந்த பூச்சியினை கட்டுப்படுத்த 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதையை கலந்து பயன்படுத்தலாம்.

🐛 மேலும் 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து பயன்படுத்தலாம்.

*நெல் இலை சுருட்டுப் புழு :*

🐛 300 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தௌpக்க வேண்டும்.

*நெல் தூர் அழுகல், இலை அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

*நிலக்கடலை தூர் அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*பயறு வகை சாம்பல் நோய்:*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*தென்னை வாடல் நோய் :*

🍂 இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.