மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா

மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா
Agriwiki.in- Learn Share Collaborate

கார்பன் சுழற்சி பற்றி தெரியுமா..??

மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா??

🍁 கிராமத்தில் கிணறு தோண்டும் போது அடுக்கடுக்காக மண்ணை ஆய்வு செய்தால் நிலம் அடியில் செல்ல செல்ல ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.

🍁 மேல் மண்ணை ஆய்வுக்கு எடுத்தால் ஊட்டச்சத்து இல்லை என்ற முடிவை காண்பிக்கிறது. ஆனால் ஆழத்தில் உள்ள மண் ஊட்டச்சத்து உடையது.

🍁 இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. மண் பரிசோதனை முடிவுகளும் ஆழம் செல்ல செல்ல அதிகரிக்கிறது என்றே தெரிவித்தன.

🍁 மண் பரிசோதனையில் மண்ணின் கார அமில நிலையும் ஆழம் செல்ல செல்ல மாறுகிறது.

🍁 காட்டில் உள்ள மண்ணை சோதனை செய்து பார்த்த போதும், வேர் அருகில் ஊட்டச்சத்து இல்லை. அடியில் உள்ள சத்துக்கள் கீழிருந்து மேல் வருகின்றன.

🍁 15 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதில் ஆறு ஆறு அங்குலத்திற்கு மண் சேகரித்து மண் பரிசோதனை செய்தால், வேரின் அருகில் சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அடிபரப்பில் சத்துக்கள் அதிகரித்த நிலையில் உள்ளது.

🍁 வேர்களுக்கு அருகில் ஊட்டச்சத்து இல்லை என்றாலும், மரத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. அப்படி என்றால் மூன்றாவது காரணிகள் மண்ணிற்கு சத்தைக் கொடுக்கின்றன.

நான்கு இயற்கையான முறைகள் மூலம் ஊட்டச்சத்துக்கள் மேலே எடுத்து வழங்கப்படுகிறது.

1. ஊட்டச்சத்து சுழற்சி

2. நுண்புழை ஏற்றம்

3. புயல்

4. மண்புழுக்களின் செயல்பாடு ( நாட்டு மண் புழுக்கள்)

ஊட்டச்சத்து சுழற்சி இயற்கையின் விதிமுறைப்படி ஒவ்வொன்றும் தோன்றிய இடத்திலேயே முடியும். இது ஊட்டச்சத்து சுழற்சி எனப்படுகிறது

கார்பன் சுழற்சி :

🍁 கரிமம் அனைத்து புவி உயிர்களிலும் உள்ளது. காய்ந்த செடிகளில் 46 சதவீதம் கார்பன் உள்ளது. இந்த கார்பன் காற்றில் இருந்து ஒளிச்சேர்க்கை மூலம் எடுக்கப்படுகிறது.

காற்றில் உள்ள கரிமத்தின் அளவு 280 – 300 ppஅ ஆக உள்ளது. இந்த நிலை சுவாசம் மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு சரியான அளவாகும்.

🍁 இந்த கார்பன் தாவரத்தில் சேகரமாகும். அத்தாவரம் இறந்த பின் மக்கும் போது இந்த கார்பன் மீண்டும் வெளிவிடப்படுகிறது.

🍁 கார்பன் மீண்டும் காற்று மண்டலத்திற்கு செல்கிறது. கார்பன் சுழற்சி இவ்விதம் நிகழ்கிறது.

நீர் சுழற்சி :

🍁 மே மாதத்தில் கடல் நீர் பெருமளவு ஆவியாகிறது. இந்த நீராவி மேகங்களால் உறிஞ்சப்படுகிறது.

🍁 மழை மேகங்கள் 700 சதுர மைல் அளவுடைய நீராவியை சேகரிக்கிறது. பருவ மழையின் போது இந்த நீர் மழையாகப் பொழிகிறது. நதிகளில் சேரும் நீர் மீண்டும் கடலுக்கு செல்கிறது. இது நீர் சுழற்சி.