மண்ணு மலடு ஆயிருச்சு – தாய்மண்

Agriwiki.in- Learn Share Collaborate

தாய்மண்….

“மண்ணு மலடு ஆயிருச்சு”
அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது
பெருசா எதுவுமே எனக்கு புரியல.
அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் பார்க்கும்போது,
அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா களத்துல பார்க்கும்போது புரியுது.
உதாரணத்துக்கு தென்னை மரத்த்துல வருஷத்துக்கு குறைந்தபட்சம் 500கிலோ அளவுக்கு அறுவடை செய்கிறோம். அதாவது
தேங்காய், தொட்டி, மஞ்சி,மட்டை….
இந்த மாதிரி சுமார் 300- 400 கிலோ எடையுள்ள பொருட்களை அறுவடைசெய்கிறோம்.
மரம் மண்ணிலிருந்து சத்துக்களை
எடுத்து பொருட்களாக நமக்கு தருகிறது…..
சரிதானே…..

அப்படி மண்ணிலிருந்து
சத்துக்களை எடுத்ததால
பெரிய குழி தானே அந்த இடத்தில் இருக்கணும்….
இல்லையா.
ஆனால் காடுமுழுவதும்
மேடாகத்தானே இருக்கிறது…
அப்படின்னா
மண் தன்னைத்தானே தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறது.
அதாவது ஒரு தாய் குழந்தைகளை பெற்றுக் கொள்வது போல
மண் பெருகிக் கொண்டே இருப்பதாக அர்த்தம்.
தன் இனத்தைப் பெருக்கும்
அப்படிப்பட்ட மண் தான்
தாய் மண் …….
அப்படி இல்லாமல்
நுண்ணுயிரிகள் இல்லாமல்
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாத
தன் இனத்தைப் பெருக்காத
மண்….
மலட்டு மண்
என்று இப்போது புரிகிறது.
என் தாய் மண்ணை வணங்குகிறேன்.
என் தாய் மண்ணை எனக்கு அடையாளம் காட்டிய
அந்த மாபெரும் பிதாமகன் நம்மாழ்வாரை வணங்குகிறேன்.
ஜனவரி 1 >>வானகம்.

Karthik maniarasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.