மரபனு மாற்று விதை என்பது
பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை
குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ???
அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது
குழந்தை பன்னாட்டு முதலாளியோடதுதானே
அதோட பெத்துகிட்ட பிறப்பும் மலடுதானே
இன்ஷியல் ஒனர்ஸ் மட்டும் நாம்
மற்றது பன்னாட்டு முதலாளியோடது
பெக்கரப்ப எல்லாம் பன்னாட்டுகாரன தேடனும்
மரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம். இதுபோன்ற உருவாக்கங்கள் சாதாரணமாக உலர்ந்தும், தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படுவதாகவும் உள்ள பகுதிகளிலும், பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொடரலாம். இருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது என்பதையே நிரூபித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள் குறித்தே எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, மலட்டு விதைகளை உருவாக்கும் மரபணுரீதியில் மாற்றப்பெற்ற அழிப்பு விதைகள்,போன்ற மரபணு மாற்றமுறைகளை குறித்து சூழலியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நோய் எதிர்ப்பு விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும், உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும் எதிர்கொள்கிறது.
காப்புரிமை
மற்றொரு முரண்பாடான பிரச்சினை, மரபணு மாற்ற விதையை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை பாதுகாப்பு ஆகும்.
நிறுவனங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்பதால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கி்ன்றன.
தற்போது, உலகின் விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும், லாபத்திற்காக உயிர்ப்பொருள்களை பயன்படுத்திக்கொள்வதாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்றத்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்கள்.
காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடுத்து பயிரிடுவதற்காக அவற்றை சேமித்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்,
???????
அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது.
பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும்.
வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது.
ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது.
இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதாகவும் வேளாண் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.
Jagasesh jay from fb