மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள்
கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன.
மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.
இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும்.
🐐 ஒரு சில நேரங்களில் வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுதும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
🐄 கால்நடைகளில் அதிகமாக செரிமான கோளாறுகள் ஆடுகளுக்கு ஏற்படும்.
ஆடுகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்வதற்கான அறிகுறிகள் :
🐐 செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட ஆட்டின் வயிறு உப்புசமாக இருக்கும்.
🐑 உப்புசத்தின் காரணமாக மூச்சு திணறும். இதனால் வாயினால் மூச்சு விடும்.
🐐 ஆடுகள் உறக்கமின்றி காணப்படும்.
🐑 அடிக்கடி பல்லை கடித்துக் கொள்ளும்.
🐐 பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை நன்றாக ஊன்றி நிற்காமல் மாறி மாறி கால்களை வைத்துக் கொள்ளும்.
🐑 இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும்.
🐐 நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்கும்.
🐑 தலையையும், கழுத்தையும் முன்னோக்கி தொங்கவிட்டு வைத்துக் கொள்ளும்.
தடுப்பு முறைகள் :
👉 நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மி.லி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக மருந்தாக கொடுக்கலாம். இதனால் செரிமான கோளாறு குறையும்.
👉 அவ்வாறு கொடுக்கும் போது ஆட்டிற்கு புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
👉 அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளலாம்.
👉 இல்லாது போனால் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் பச்சை புல் மேய்வதை தடுத்து, காய்ந்த தீவனபுல், கடலைகொடி இவற்றை கொடுக்கலாம்.
👉 தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப் பொருட்களை அதிகம் சேர்க்க கூடாது.
👉 கால்நடை மருத்துவமனையில் மருத்துவரால் பரீசிலிக்கப்படும் பூச்சி மருந்துகளை கொடுக்கலாம்.
👉 இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் செரிமான கோளாறுகளை குறைக்க முடியும்.