மானாவாரியில் ஓர் ரூசீகரம்

மானாவாரியில் ஓர் ரூசீகரம்

*மானாவாரியில் ஓர் ரூசீகரம்*.

என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம்.

அப்படி ஒரு நாளில் பண்ணைக்குட்டை அமைக்க திண்டுக்கல் ஆத்தூர் வட்டம் பாளையங்கோட்டையைச் சார்ந்த ஒரு விவசாயி சம்மதம் தெரிவித்தவுடன் அடிக்கும் வெயில் கரைந்து போகுமளவு சந்தோசத்துடன் அவருடன் இடத் தேர்வு செய்ய மலையடிவாரம் சென்றேன். இரண்டு போர்களுக்கிடையே மேட்டில் தண்ணீர்ப் போக்கை உறுதி செய்து இடம் அளக்க ஆயத்தமானோம். பொட்டல் காடு. தண்ணீர், டீக்கு 4 கி.மீ வரவேண்டும். சர்க்கரை என்பதால் பசி வேறு. அருகில் திரும்பிப் பார்க்க சிறு இலந்தைச் செடி. சிறு ஆப்பிள்களாய் கண்ணில்பட ஆர்வத்துடன் பறிக்க அருகில் சென்றேன்.விர்ர்ரென 6 குருவிகள் பறந்து வெளியேறியது. குருவிகள் தின்பதைக் கெடுத்துவிட்டோமே எனற எண்ணத்துடன் முள்கடியுடன் ஒரு கைநிறைய இலந்தையைப் பறித்துக் கொண்டு அருகிலிருந்த வேலமர ஒற்று நிழலில் நின்று இலந்தையைக் கொறித்தேன்.

மெதுவாகத் திரும்பினால் மீண்டும் அக்குருவிகள் இலந்தை மரத்தில் பிரிந்து அமர்ந்து கொறிக்க ஆரம்பித்தது.
இருவரும் இதைப் பார்த்தோம்.
எங்கள் அளவையில் அந்த இலந்தைமரம் அடிபடுவதாக வந்தபோது அந்த விவசாயியைப் பார்தேன். சார் இன்னும் மேலே குட்டையைப் போட்டுக்கலாமா? “இலந்தை பாதிக்காமல்” என்றார். என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என் உள்மனம் அவரிமும் உள்ளதே என ஆனந்தப்பட்டு மேட்டு நிலத்தை அளந்து மகிழ்ந்து திரும்பினேன். ஆண் விவசாயிக்குள் பறவைகளை நினைக்கும் “தாய்”.

50கி.மீ வேகமென்றாலும் வானில் பறப்பது போல் ஓர் உணர்வுடன் திரும்பினேன்.

இயற்கை அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து தங்க வைக்கும் வகையில் பழ மரங்களை உணவுக்காகவும், முட்களுடனும் உயிர் வேலியை இலந்தை உருவில் வைத்துள்ளது.

என் உணர்வுகளைப் பகிரும் பொருட்டு இந்தப் பதிவு.

Sebastian britto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *