மாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு

மாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு
Agriwiki.in- Learn Share Collaborate

“கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்கமாவுப்பூச்சியை அழிக்கும்.அழிக்கிறது. – Ganesan Nallamuthu

குடும்பத்தினர் குடித்த மீதம்,
கசடு தண்ணீர் ஊற்றி மறுநாள்
தெளித்த ரிசல்ட்

கலவை,நீர் சேர்ப்பு அளவுபற்றி
எல்லாம் கவலைப்படாது

செய்த செயல்.

இனி வேண்டுமானால் ஆய்வு செய்ய வேண்டும்.

Ganesan Nallamuthu

 

எப்போதும் ஒன்றின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கவேண்டும். நம் மூச்சு அதன்மேல் பட்டுகொண்டே சுவாசிக்க வேண்டும். விவசாயமெனில் எப்படி என்ன ஏது என மனம் உளன்றுகொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் நானும் இயங்கிவருகிறேன். அண்ணன் Ganesan Nallamuthu ஒரு நல்ல உதாரணம். தனக்கான வருமானத்தை இயற்கையில் தேடி பொருளீட்ட முடியாவிட்டாலும் அதை அடுத்தவர் பயன்படும்விதமாக மெனகெட்டு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதையாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வர் அவருக்கு அதிகம். மின்சாரம் இல்லாமல் குட்டை தண்ணீரை இறைக்க வழி , மழை அறுவடை , ஜீவாமிர்தம் தயாரிப்பு & விற்பனை,
பசுமாடு சாணி பண்ணை , சாணிப்பண்ணை விரிவாக்கம் என பலவற்றிலும் கால் ஊன்றி சேற்றில் உளன்று எழுந்துவருவார். கிடைப்பதை எல்லாம் ஆராய்ந்துவிடுவார்…அப்படி ஒன்றை இன்று சொல்லி உள்ளார்கள்.

மாவுபூச்சி கட்டுபாடு பலரும் திண்டாட வைத்துள்ளது. அதற்கான தீர்வாக செயற்கை இயற்கை எதிலும் இதுவரை இவ்லை. ஆனால் இயற்கை முறையில் ஒன்றை கண்டு
எல்லோரையும் மிரள வைத்திருக்கிறார். அதுதான் இது.

“மாவுப்பூச்சி ! எத்தனை நியூசெனஸ்,ஆபத்தான அழிவுசக்தி!பட்டவர்களுக்கு தெரியும். “கபசுர” குடிநீர் தெளிப்பு உறுதியான எளிதான தீர்வு.”

எவ்வளவு எளிதான தீர்கமான தீர்வாக உள்ளது.பயன்படுத்தி பாருங்கள். பலன்களை பகிர அடுத்தவருக்கும் உபயோகமாக இருக்கும்.

நன்றி அண்ணா. –

Kalyan Sundar

 

 

“கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்க மாவுப்பபூச்சியை அழிக்கும் அழிக்கிறது…

விவசாயிகளே,
இதை மருந்து அடிக்கும் மெஷினில் ஊற்றி மற்ற பயிர்களின் மீது தெளித்து முயற்சி செய்து பார்க்கலாம்.. 👍

இங்கிலிஷ் மருந்துக்கு கட்டுப்படாத வைரஸ் ,பேக்டீரிய மனித நோய் , சித்தா விற்கும் ஆயுர்வேதத்திற்கு அடிபணிந்து விட்டது…

கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சா பயிர் வகைகள் ஏற்படும் நோய்க்ள் சித்தா , ஆயுர் வேத மருந்துகளால் கட்டுக்குள் வர வாய்ப்பே…!!

மாற்றி யோசியுங்க விவசாய மக்களே!! – செந்தில் சின்னசாமி

One Response to “மாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.