பொன்னியம் இயற்கை வழியிலேயே தயாரிக்க முடியும்.
மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கி.
2லிட்டர் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் பொன்னியம் 25கிலோ யூரியாவுக்கு சமம் என சொல்லராங்க. இந்த சம்மன்பாட்டை சரியா என ஆராயவில்லை. ஆனால்
இரண்டு லிட்டர் பொன்னியம் தயாரித்தால் ஏக்கருக்கு 400மில்லி விதம் ஒரு போகம் யூரியாவின்றி நெல் அறுவடை செய்யமுடியும்.
அதாவது 30மில்லி பத்துலிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
பொன்னியம் தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்.
மண் பாணை 5 லிட்டர் கொள்ளவு
பசுமாட்டு தயிர் 2 லிட்
(காப்பர் கம்பி இது கெமிக்கல் என்பதால் நாம் உபயோகிப்பது
இயற்கை முறையில் காப்பர் சத்து நிறைந்தது)
ஆவாரம்பூ 200 கிராம்
புங்கன் எண்ணெய் 450மிலி
வேம்பு எண்ணெய் 450 மிவி
காதி சோப் 100கிராம்
சோற்று கற்றாழை 200கி
பப்பாளி பழம் 500கிராம்.
ஆவரம்பூ, சோற்றுகற்றாழை ,பப்பபாளி பழம் போன்றவற்றில் காப்பர் சத்துக்கள் உள்ளன. நாம் ஆவரம்பூவில் அதிகப்படியான காப்பர் சத்து உள்ளதால் அதை பயன்படுத்துவோம். தேவை எனில் சோற்றுகற்றாழை , பப்பாளி பழம் கூலாக சேர்க்கலாம்
செய்முறை.
2 லிட்டர் பசுமாட்டு தயிரை மண்பானையில் ஊற்றி அத்துடன் ஆவரம்பூ (சோற்றுகற்றாழ,பப்பாளி பழம் இருந்தால் சேர்க்கலாம்)
சேர்த்து நன்கு குச்சியால் கலக்கிவிட்டு பானை வாய்ப்பகுதியில் சிறிது மைதா மாவு சுற்றிலும் வைத்து காற்றுபுகாவண்ணம் மூடிவைத்து ஒரு கிலோ எடை அளவில் கல்லால் மூடிவைக்கலாம். ஐந்து நாட்கள் கழித்து திறந்துபார்க்கும்போது
ஆவாரம்பூவில் உள்ள காப்பர் சத்துகளை தயிர் கிரகித்து பச்சையாக தெரியும்.
இத்துடன் வேம்பு +புங்கன் எண்ணெய் காதி சோப்பில் கரைத்து சேர்த்து கொள்ளவும். இதிலிருந்து பத்துலிட்டர் தண்ணீருக்கு 30மில்லி என்ற அளவில் பொன்னீயம் சேர்த்து வயலில் தெளிக்கலாம்.
பதிவு : Kalyan Sundar