வரகு
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.
இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
வரகில் உள்ள சத்துக்கள்:
வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகின் மருத்துவ குணங்கள்:
சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம்.
வரகு கஞ்சி
தேவையான பொருட்கள்: வரகு அரிசி, தயிர், பச்சை வெங்காயம், உப்பு.
வரகு அரிசியுடன் தேவையான அளவு நீர்விட்டு சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பச்சை வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
தினமும் காலையில் இதை சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும்.
வரகு அரிசி:
வரகு அரிசி உன்னதமான மருத்துவ குணங்களை கொண்டது. சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல், புளியோதரையாக செய்து சாப்பிடலாம். உடலுக்கு வலிமையை கொடுக்கும் இது வலியை போக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.