தென்னை விவசாயத்தில் வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:
1. முறையான மூடாக்கு அமைக்க வேண்டும். *மூடாக்கு அமைப்பதை அலட்சியமாக நினைக்கக் கூடாது*. வறண்ட காலங்களில் பகல் நேர அதீத வெப்பத்தால் நிலம் சூடாவதைத் தவிர்க்கவும், வெப்ப காற்று நிலத்தின் மேல் பரவாமல் தடுக்கவும், கொடுக்கும் குறைந்த நீர் பரவவும், பூமிக்குள் இறங்கி பலன் தரவும் மூடாக்கு மிகவும் முக்கியமானது.
2. மரங்களை சுற்றி உள்ள வட்டப் பாத்தியில் மட்டுமே மூடாக்கு பரப்புவதைத் தவிர்த்து, வெயில் படும் *நான்கு மரங்களுக்கு நடுவான இடத்தையும்* மூட வேண்டும். காய்ந்த தென்னை மட்டைகளை நான்கு மரத்திற்கு நடுவாக பரப்பி வைக்கலாம்.
3. பாம்பு போன்ற உயிரினங்கள் வரும் அல்லது அடைந்து விடும் என்ற கூற்றுக்களைத் தவிர்த்து, காய்ந்த தென்னை மட்டை ஒன்றைக் கூட நான்கு மரத்திற்கு நடுவே பரப்பி வைக்கலாம். தோட்டத்தினுள் நடக்கும் போது ஒரு குச்சியை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டே நடக்கலாம்.
4. நிலத்தின் ஓரத்தில் கம்பி வேலிகள் அமைத்து இருந்தால் காய்ந்த மட்டைகளை ஆங்காங்கு அல்லது தொடர்ந்து *வேலிக் கம்பிகள் மேல்* வைத்துக் கட்டலாம். இதன் மூலம் அடுத்த நிலங்களில் இருந்து வரும் வெப்ப காற்றை தடுக்கலாம்.
5. இவ்வகையான வேலை தடுப்பானாக *50% அல்லது 75% பச்சை நிழல் வலையை* வேலிகள் மேல் வைத்து கட்டி விடலாம்.
6. தண்ணீர் பாய்ச்சும் வட்டப்பாத்தியில் தட்டைப்பயிறு, வெண்பூசணி, சுரக்காய் போன்ற அகன்றை இலை தரும் பயிர்களின் விதைகளை நடவு செய்யலாம்.
7. இவ்வாறு மூடாக்கு அமைப்பது இப்போது மட்டும் அல்லாது இரண்டாம் கோடையான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் நல்ல பலன் தரும்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு