வானக நண்பர்களுக்கு வணக்கம்

Agriwiki.in- Learn Share Collaborate

வானக நண்பர்களுக்கு வணக்கம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது.

வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது.

அவ்வாறு கிடைக்கபெற்ற நிதியில் அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, நினைவு நாள் நிகழ்ச்சி, வானக ஊழியர்களின் ஊதியம்,தன்னாலர்களுக்கான உணவு, பயிற்றுனர்களுக்கான ஊதியம்,மின்சாரம், அலைபேசி, கால்நடை பராமரிப்பு, மற்றும் அலுவலக நானாவித செலவுகளையும் செய்தது போக மீதமுள்ள நிதியை பயன்படுத்தி வானகத்தில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பண்ணை விரிவாக்கம் செய்து வருகிறது.

அப்படி உருவாக்கபட்ட உள்கட்டமைப்புகளில் கஜா புயல் ஏற்படுத்திய சேத விவரம்.

1.(11*35) நீல அகலம் உள்ள மாட்டு கொட்டகை இதில் ஓடுகள் முற்றிலும் சேதம் சில கற்தூன் மற்றும் மரசட்டங்களை பயன் படுத்தலாம் இதை சீரமைக்க ரூபாய் 60,000/-

2.வானகத்தின் தேவையறிந்து வானக ஆடிட்டர் அவர்களின் நண்பர் மூலமாக சினர்ஜி சோலார் சிஸ்டம் மூலமாக வழங்கபட்ட 5HP திறன் கொண்ட சோலார் மின் அமைப்பில் உள்ள 20 சூரிய பேனல்களில் 6 முற்றிலும் சேதம் இதன் மதிப்பு தோராயமாக 60,000/-
மற்றும் VFD சேதம் அடைந்துள்ளது இதன் மதிப்பு 30,000/-பேனல் வைக்கும் சட்டம் சேதம் அடைந்துள்ளது இதை சீரமைக்க தோராயமாக 45,000/-

3.வானகத்தின் மையமாக உள்ள பயிற்சி குடில் பலவீனபட்டுள்ளது இந்த மழைகாலம் முடிந்தவுடன் குடிலை சீரமைக்க மூங்கில்,கீத்து,பாலை, கயிறு மற்றும் வேயப்படும் ஊதியம்.இதன் மதிப்பு தோராயமாக 1,00,000/-

ஆக மொத்தம் – 2.95,000/-

இந்த அளவில் நிதி தேவைபடுகிறது.புயலால் வானகத்தில் விழுந்த மரங்களால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை அம் மரங்களை வானக ஊழியர்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் சிறுக சிறுக சரி செய்து கொண்டுள்ளார்கள்.

கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மொத்த செலவையும் இப்பொழுது உள்ள நிதி நிலையில் வானகத்தால் தாங்கும் சூழல் இல்லை ஆகவே வானக நண்பர்களின் உதவியை எதிர் நோக்குகிறோம்.

தொடர்புக்கு.
8825810072 – கார்த்திக்

வங்கி விவரம்
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000010001
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu

நன்றி
வானகம்
24.11.2018