விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை
Agriwiki.in- Learn Share Collaborate

 விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும் போது சில முறைகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம்.

👉 சிலர் தொட்டியில் விதை போட்டு வளர்ப்பார்கள். அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்க கூடாது.

👉 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைகேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும்.

🍃 விதைக்கும் போது விதைகளை மிக மிக அருகில் விதைக்க கூடாது.

🍃 மேலும் ஆழமாக விதைக்க கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும்.

🍃 விதைத்தப்பின் நீர் அதிகமாக ஊற்ற கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிகம் ஈரம் இருந்தால் முளைக்காது.

🍃 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.

🍃 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும்.

🍃 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்க கூடாது.

🍃 நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும்.

🍃 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

🍃 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும்.

🍃 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம்.

🍃 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும்.