விவசாய நண்பர்களுக்கு

விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.
இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம்.
மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள்.
1000பேர் கொண்ட குழுக்கள் இப்போது சுருங்கி குறைந்த பட்ச விவசயிகளிஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அரசு சலுகைகளை பெற்று திறம்பட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட வேண்டும்.
கூடி வாழ்ந்தால் கோடி நம்மை.
இனி தனி மனிதர் வெறும் பேச்சால் மட்டுமே இருக்கமுடியும் அன்றி சிறப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு.
தங்கள் போக்கிற்கு ஒத்து செயல்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி தங்கள் ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ விற்பனைசெய்து தங்கள் பொருளுக்கு அதிகபட்ச விலையை தாங்களே நிர்ணயம் செய்து பயனடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
உணவு பொருட்கள் மட்டுமே அன்றி நாம் விவசாய உற்பத்தி பொருட்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுமதிசெய்யவோ, இயந்திரங்கள் கொண்டு மதிப்புகூட்டவோ, மொத்த வியாபாரத்தில் ஈடுபடவோ, உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவோ வழிவகை உண்டு. இதற்கெல்லாம் ஒரே மூலதனம் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை.
இதை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இது சாதாரண செயல் அல்ல.
ஆனால் செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்.
முதலில் ஒத்த கருத்துகள் கொண்ட 10 நபர்கள் ஒன்றிணைந்து குழுக்களை உருவாக்கி, நன்றாக இயங்கக்கூடிய குழுக்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
இதற்கென ஆலோசனை வழங்க தனி நபரை ஆலோசகராக அரசு நியமித்து உள்ளது. அவர்களை கலந்தாலோசித்து தங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வழிவகை செய்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு சலுகைகளை எதிர்பாராமல் 10 நபர்களுடன் உருவாக்கப்பட்ட நமது
பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
இன்று 6 மாத காலத்தில் 30 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள விவசாயிகள் இனி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். சிக்கல்கள் வராதா என்றால் வாடும் என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் பிறந்த நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் பார்த்து தானே வருகிறோம்.
அப்பபை இருக்க வேறு வேறு மன ஓட்டம் கொண்ட நபர்கள் இணையும்போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அவற்றை களைந்து அதில் இருந்து மீண்டு எழுந்து செயல்படும் குழுக்கள் வெற்றி அடையும்.நன்றி.