வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை:
வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும் வகையில் ( 4 அடி நீளம்*2.5 அடி அகலம்*4 அடி) ஆழம் கொண்ட குழி தோண்டலாம். இக்குழியில் மூன்றை அடி ஆழத்தில் 40 மி.மீ அளவுள்ள ஐல்லிக்கற்களை நிறைத்து மீதமுள்ள மேலே உள்ள அரை அடிக்கு செங்கல் வைத்து கட்டிவிடலாம். மேலும் இக் குழியை கடப்பா கல் வைத்தோ அல்லது ஜல்லி வலை வைத்தோ மூடி விட்டால் அந்த சந்தை எப்போதும் போல் உபயோகப்படுத்தலாம்.
குழி எடுப்பது, ஜல்லிக்கல் நிறைப்பது மற்றும் செங்கல் கட்டுமானம்,மூடி அமைப்பது என உள்ள வேலைகளை குறைந்த செலவில் (ரூ.4000-5000)) அமைக்கலாம்.
மொட்டை மாடியில் நீர் இறங்கும் பைப் போக மீதமுள்ள பைப் துவாரங்களைத் துணியைக் கொண்டு மூடி மொத்த தண்ணீரும் ஒரு குழாய் வழி செல்லும் வகை செய்யலாம்.
*பயன்:*
அரை மனை வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஒரு உழவு மழையை சேகரித்தால் 6 மாதத்திற்கு தேவையான நீரை உங்கள் ஆழ்துளைக் கிணற்றில் சேகரிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு:
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552