வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் கல்

Agriwiki.in- Learn Share Collaborate

வீடு கட்டும் செலவை குறைக்க

வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும்.

இந்த கற்கள் தரமான செம்மண்ணை கொண்டு மெஷின் மூலம் செய்யப்பட்டு பின்னர் சூலையில் வைத்து ஏறிக்கப்படுகிறது.winsberger கம்பெனி தான் இதனை உலகம் முழுவதும் தயாரித்து விற்பணை செய்கிறது.இதனுடைய தொழிற்சாலை கர்நாடகாவில் உள்ளது.கேரளாவிலும் சில தொழிற்சாலைகள் உள்ளது.

(((இதற்கு காரணம் தேவையான செம்மண் அந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது))))

இந்த கற்களை பார்ப்பதற்கு ஓட்டை ஒட்டையாக இருந்தாலும் அவை அதிக தாங்கு திறன் சக்தி கொண்டவை.மற்றும் கற்கள் நல்ல புற அமைப்புடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை.மற்றும் கற்களில் ஓட்டைகள் இருப்பதால் இதனுள் சூடும் ,குளிரும் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது.மற்றும் இவை எடை குறைவான கற்கள் என்பதால் அடித்தளம் அமைக்கும் செலவும்,beam,column அமைப்பும் செலவும் குறைகிறது.
மற்றும் இது சாதாரண செங்கல்லை விட 8 மடங்கு பெரியது அதனால் கட்டுமான செலவும்,நேரமும் மிகவும் குறைவு.
இதனை சாதாரண கலவை கொண்டும் கட்டலாம்.அல்லது இதற்காகவே அந்நிறுவனம் ஒரு ஒட்டும் பசையை வழங்குகிறது அதனையும் கலவைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.இதனை பயன்படுத்தும்போது சிமெண்ட் ,மணல் தேவை இல்லை.
இந்த கற்கள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

1.கிடைமட்ட துளையுடைய கற்கள்
2.செங்குத்து துளையுடைய கற்கள்

கிடைமட்ட துளையுடைய கற்கள் framed structure எனப்படும் கட்டிட அமைப்பிற்கு சுவரை வெறுமனே அடைக்க மட்டுமே பயன்படுகிறது.இது அதிக எடை தாங்காது.காரணம் கட்டிடத்தின் எடை இம்முறையில் beams மற்றும் column மூலமாக பூமியை அடைகிறது.அதனால் சுவருக்கு எடை தாங்கும் வேலை இல்லை.அங்கு இதனை பயன்படுத்தலாம்.

செங்குத்து துளையுடைய கற்கள் அதிக எடையை தாங்க கூடியவை..எனவே இதற்கு column,beam தேவை இல்லை.இது load bearing structure முறைக்கு மிகவும் ஏற்றது.இதனை கொண்டு G+3 வரை கட்டலாம்.
பிளம்பிங் மற்றும் ஒயிரிங் அமைப்புகள் சாதாரண கட்டிடத்தில் அமைப்பதை போன்றே உடைத்து அமைத்து கொள்ளலாம்.பின்பு அதை மட்டும் பூசி மறைத்து விடலாம்.

இந்த கற்கள் மூன்று அளவுகளில் கிடைக்கிறது.வெளிப்புற சுவர்களுக்கு பெரிய கள்ளையும் உட்புற அரைக்கள் சுவர்களுக்கு சின்ன கல்லையும் வடிவமைப்பை பொறுத்து அமைத்து கொள்ளலாம்.

இதன் அளவு விபரம்

Porotherm HP 200_____ 400x 200x 200 mm
Porotherm HP 150 ____ 400x 150 x200mm
Porotherm HP 100 ______400x100x200mm

இரண்டு வகை கல்லுக்கும் இந்த அளவுகள் பொருந்தும்.

மேலும் இந்த கற்களை பற்றிய சோதனை விபரங்கள் அறிய https://wienerberger.in/facts/wall-solutions-porotherm-smart-bricks என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

சரி இனி இதிலுள்ள பிரச்சினைகளை பார்க்கலாம்
1.நாம் பொதுவாக கூரைக்கு பயன்படுத்தும் மங்களூர் டைல்ஸ் நாளடைவில் அடிப்புரம் பொரிந்து உதிர்வதை பார்த்திருப்பீர்கள்.தரமற்ற கள்ளை பயன்படுத்தினால் இதுவும் அதே போல பொரிந்து உதிற வாய்ப்பு அதிகம்.sunshade அமைப்பு வீட்டை சுற்றி நிச்சயம் வழங்க வேண்டும்.

2.இந்த கற்கள் சுலபமாக அனைத்து இடத்திலும் கிடைப்பது இல்லை.மீண்டும் இதனை டிரான்ஸ்போர்ட் செய்தால் கற்கள் விலை அதிகமாகி கடைசியில் வீட்டு செலவு அதிகமாகிவிடும்.
3.நிச்சயம் தரமான கொத்தனார் தேவை..

இவை கேரளா,மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
இது தமிழ்நாட்டில் மதுரை,திருச்சி,திருப்பூர் பகுதிகளில் கிடைக்கும் இடங்களை புகைப்படத்தில் பதுவிட்டுள்ளேன்.மற்றும் சென்னையில்

இதன் விலை விபரம்

Horizontal holed blocks
8″ block—68 rs
6″————-58 rs
4″————-44 rs
Veritcal holed tiles
8″——-78 rs
6″——-68 rs
4″——–50 r

வேறு ஏதேனும் கிடைக்கும் இடங்கள் தெரிந்தால் கமென்ட்ல பதிவிடுங்கள் மற்றும் இந்த கற்களின்மூலம் கட்டப்பட்ட வீடுகளின் புகைப்படம் மற்றும் இது சம்பந்தப்பட்ட காணொளிகளை இணைத்துள்ளேன்…

மறக்காம ஷார் பன்னிருங்க….
தொடரும்…
நான் உங்கள் ஹரி.

One Response to “வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் கல்”