வெண்டைக்காய் சாகுபடி

வெண்டைக்காய் சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate

வெண்டையை பயிரிடலாம் இந்த பருவத்தில்..!!
வெண்டைக்காய் சாகுபடி..!!

🍁 காய்கறி பயிர்களில் வெண்டைக்காய் முக்கியமானது. இது உலகின் எல்லா பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

இரகங்கள் :

🍁 கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹhப், பார்பானி கிராந்தி, கோ 3, பு+சா சவானி, வர்சா உப்கார்.

க பருவம் :

🍁 விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜூன் – ஜூலை மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்கள் ஆகும்.

நிலம் தயாரித்தல் :

🍁 நிலத்தை 3 அல்லது 4 முறை நன்கு உழவேண்டும். கடைசி உழவில் தொழு உரம், மண்புழுவுரம், வேப்பங்கொட்டை புண்ணாக்கு போன்றவற்றை இட்டு நிலத்தை நன்கு சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விதை நேர்த்தி :

🍁 விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். அல்லது அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பதால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்.

விதைத்தல் :

🍁 விதைகளை 30 செமீ இடைவெளியில் 3 அல்லது 4 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம் :

🍁 விதைகளை நடவு செய்த உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். அதன் பின் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.

உர மேலாண்மை :

🍁 அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, மண் அணைத்து நீர்ப் பாய்ச்சவது மிகவும் அவசியம்.

களை நிர்வாகம் :

🍁 களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்று நாட்களில் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.