வேளாண்மையின் அறிவியலும் அரசியலும்

வேளாண்மையின் அறிவியலும் அரசியலும் Arachalur Selvam

வேளாண்மையின் அறிவியலும் அரசியலும்:

நம்ம திண்ணை நிகழ்வு(27.01.2019)
கோவை.

இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளர் திரு.அரச்சலூர்.செல்வம் அவர்களுடனான கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்தது.

நிகழ்வில் இயற்கைவழி வேளாண்மையின் அடிப்படை அறிவியலையும் , அரசியலையும் தெளிவாக எடுத்துரைத்தார், செல்வம் அவர்கள்.

மரபு விதைகள் , இன்றைய உழவர்களின் நெருக்கடி, நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டியவை , சுற்றுச்சூழல் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டது.

தெளிவான புரிதலுடன் நகர்வதே நமது வாழ்வினை செழுமைப்படுத்தும்.

இயற்கை சார்ந்த வாழ்வியலின் கூறுகளான

வீட்டுத்தோட்டம் முதல் தோட்ட வெள்ளாமை வரை, மரபுவழி மருத்துவங்கள் வழியே உடல்நலன் & மனநலன்; குழந்தை வளர்ப்பு , குடும்ப நலன் , சூழல் நலன் போன்றவற்றில் நாம் அறிந்ததை நமக்குள் பகிர்ந்து வாழ்வினை மேம்படுத்துவதற்கான தொடர்சந்திப்புகளின் தளமே #நம்ம_திண்ணை .

 

இந்நிகழ்வுகள் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ச்சியாக நடைபெறும்.

நம்ம திண்ணை நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இணைந்துகொள்ளலாம்.

நஞ்சில்லா நலவாழ்விற்காக அனைவரும் சேர்ந்து பயணிப்போம் !!!
வாருங்கள் !!!

அன்பும்
மகிழ்வுடனும்

-செந்தில் குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *