அனுபவம்-தற்சார்பு வாழ்வியல்

இந்த நாலு வருஷத்தில 6 டன் மஞ்சள் அரைச்சதுக்கு கூலி மட்டும் கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் ஒன்றரை லகரம் போயிருக்கும்..

அது போக மஞ்சளை தோட்டத்திலிருந்து சத்தியமங்கலம் எடுத்து போக ஆட்டோ வாடகை நடைக்கு 250 ₹.

இதெல்லாம் செய்தாலும் மஞ்சள் அரைத்து கொடுக்கும் மில்காரர் எப்போ வேலையில்லாம இருயிறாரோ அப்பதான் கொண்டு வரச்சொல்வார்..

ஒரு முறைக்கு 150 கிலோ அரைப்பேன்..
என்னதான் நம்ம பக்கத்திலேயே நின்னு இயந்திரத்தில் அரைத்தாலும் (Flavor அல்லது பல்வரைசரில்) மஞ்சள்தூள் கொஞ்சமாவது சூடு வருவதை தவிர்க்கவே முடிவதில்லைங்க…

இறுதியில் நம்மளே சொந்தமா இந்த இயந்திரம் பொருத்தீட்டா என்னானு ஆறு மாசமா தேடதலில் இருந்தேன்..

ஒருத்தர் சிங்கிள் பேஸ் போடுங்கனு சொன்னார்.
இன்னொருவர் மூனு பேஸ் போடுங்க அப்பதான் இயந்திரம் நல்லா இயங்கும் னு உறுதியா சொன்னார்..

சரினு மின்வாரியத்தை அனுகி புதுசா ஓர் மின் இணைப்பை வாங்கிடலாம்னு விசாரிச்சா ஒயரிங்க மற்ற செலவுனு முப்பதாயிரம் ஆயிரும் போல.

அதுவும் குறைந்தது மூனு குதிரை திரனுக்குதான் இணைப்பே கொடுப்பாங்கலாம்..
அது போக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சராசரியா 1,500 ரூபாய்(மினிமம்) வருமாம்..

மாதம் முன்னூறு யூனிட்டுக்கு மேல செலவு செய்தால் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய்க்கு மேல செலுத்தனுமாம்..

விசாரிச்சேன்.
தலை சுத்துச்சு..

வெண்ணையை கையில் வச்சுட்டு நெய்க்கு ஏன் அலையனும்னு
இருக்கிற சூரியஒளியிலேயே பொருத்தி பாத்தா என்னானு தோனுச்சு..

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் சொன்னாங்க..
ஒரு நண்பர் சூரிய ஒளி யில் மோட்டார் ஓடும் ஆனா நீங்க அதுக்கு பிரத்யேகமா தயாரான மோட்டர் வாங்கி பொருத்தனும்னு சொன்னார்..

சரினு மன்னார்குடி முகநூல் தோழர்
Senthil V அவர்களை விசாரிச்சேன்.
ஏனா சூரியஒளி மின்தகடு வர்த்தகத்தில் இருப்பதால் அவரை கேட்டுப்பாக்கலாம்னு கேட்டேன்.

“சூரிய ஒளியுனு மோட்டார் தனியா இருப்பது உண்மைதான்,
ஆனா அதுக்கு நீங்க அதே மோட்டார்தான் வாங்கி வைக்கனும்னு அவசியமில்ல..
மின்சாரத்தில் ஓடுகிற மோட்டாரை கூட பொருத்தலாம்..
சூரிய ஒளி மோட்டாருனு பெயரை வச்சுட்டு காசு பார்க்கிற கூட்டம்தான் அதிகமா இருக்கிறதே தவிர இந்த விபரத்தை இந்த துறையில் இருப்பவங்க பெரும்பாலானவங்க சொல்ல மாட்டாங்”கனு சொன்னார்..

சரி வாரத்தில் மூனுநாட்கள் இந்த சூரிய ஒளி தகடு சும்மாதான் இருக்குனு இதே பயன்படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சேன்..

இனி மோட்டார் பிரச்சனையில்லை,
அரைக்கும் இயந்திரம்தான் தேடனும்னு யோசிக்கும் போது முகநூல் சொந்தம்
சகோதரி
Mahalingam maheshwari
Ulavar Anand ஆகியோர்
போன மாதம் வீட்டுக்கு வந்தாங்க.

இதை பற்றி பேசும் போது மதுரையில் யசோதைனு ஒருத்தங்க இருக்காங்க அவர்களை கேட்டுபாருங்கனு சொன்னாங்க.

பேசினேன்.
அவர்கள் தேனியில் சீனிவாசன்னு ஒரு பெரியவர் இருக்கிறார் இது போல இயந்திரம் பொருத்தி தருவதுதான் அவரோட வேலைனு சொல்லி அவரோட எண் னை கொடுத்தார்..

ஐயா சொந்தமா மஞ்சள் அரைக்கும் இயந்திரம் போடனும்,
எந்த மாதிரி வாங்கலாம்னு கேட்டேன்..

ஐயா சேலம் அயோத்தியபட்டனத்திலிருந்து சதீஸ் என்பவரிடம் வாங்கிதான் நான்கு இயந்திரம் பதினைந்து வருடத்துக்கு முன்பு பொருத்தினேன்..

வாடகைக்கு அரைத்து கொடுப்பதுதான் எங்க வேலை..
அது போக உங்கள மாதிரி கேட்பவர்களுக்கு புதிதாக செய்துகொடுப்போம்னு சொன்னார்.

எப்படி அரைக்குதுங்க?
இரும்பு பிளேட்டுங்களானு கேட்டேன்.

ஐயோ இல்லைங்க..
இது கல் இயந்திரம்..
இரும்பு பிளேட் இயந்திரத்தில் என்ன பொருமையாக அரைத்தாலும் சூடு வரும்.
ஆனால் இதில் அப்படி இல்லைங்க..
கொஞ்சம் கூட சூடே வராதுனு சொன்னார்.
விலையை கேட்டேன்.
17,500 ரூபாய் வரும்ங்க (மோட்டார் இல்லாமல்)
சரினு உடனடியா முன்பதிவு செய்து ஓர் தொகையையும் அனுப்பிவிட்டேன்.

எப்ப கிடைக்கும்ங்கனு கேட்டேன்..
ஒரு மாதம் ஆகும்னார்..

அதே போல நேற்று சாய்ந்திரம் இயந்திரம் வந்தவுடனே சீனிவாசன் ஐயாவுக்கு தகவல் கொடுத்தேன்.
அவரும் நேற்று இரவு கிளம்பி காலை நம்ம தோட்டம் வந்து பொருத்தி கொடுத்து பத்து கிலோ மஞ்சளையும் அரைச்சு கொடுத்துட்டு போயிட்டார்..
அதன் பிறகு மூனு மணி நேரத்தில் நாற்பது கிலோ மஞ்சளை அரைச்சேன்..
நிறம், மனம் மாறாமால்
ஒரே துளி கூட சூடே வராம தூளா வந்தது…

அடடடா..
இத்தனை நாளும் தேவையில்லாம செலவு செய்து பொன்னான நேரத்தையும் அல்லவா இழந்திட்டோம்னு இன்னைக்கு தோனுச்சு..

சரி நடக்க வேண்டிய நேரத்தில்தானே எல்லாம் நடக்கும்..

வருட வெள்ளாமை செஞ்சு தினச்செலவுக்கு என்ன செய்வேனு யோசிச்சு தூங்காத இரவு பல இருக்கும்..

ஆனா வருட பயிர் செய்தே நம்ம உழைப்புக்கு தினமும் ஓர் சராசரியான கூலி கிடைக்கிறதுனு நினைக்கும் போது
படிப்பை நா பாதியில் விட்டதே நல்லதா போச்சுனு தோனுதுங்க..!!

இந்த இயந்திரம் தேவைபட்டாலோ i
இதை பற்றி மேலும் விபரங்களுக்கு சீனிவாச ஐயாவை
9442784370
இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்..

ஏர் முனை மஞ்சள்தூள்,
மணம் , தரம், நிறம் இன்னும் கூடும்..

2 Responses to “அனுபவம்-தற்சார்பு வாழ்வியல்”

    1. அய்யா உங்கள் அனுபவங்களை மேலும் பகிர இயலும். ஈமெயில் அனுப்புங்கள் அல்லது வாட்ஸாப்பில் பகிரவும்