“இனிப்பு நரிப்பயிறு உருண்டை”
வானகம் பண்ணைல போன பட்டத்துல மானாவாரியா வெளஞ்ச நரிப்பயிறுல எதாச்சு செஞ்சு சாப்புடலான்னு, வீட்டுக்கு கொண்டுவந்து, கொஞ்ச நாளுக்கு முன்னாடி அம்மாட்ட கொடுத்தேன்.
ஒருநாள் அம்மா, சித்தி, நா எல்லா சேந்து, நரிப்பயிறு உருண்ட செஞ்சோம்.
நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அரச்சுட்டோம். இதுகூட அரச்சு தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை சேத்துட்டோம்.
கரும்புச் சக்கரைல பாகு காச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்துட்டோம். நரிப்பயிறு, பொட்டுக்கடல மாவுல அந்த சக்கரப் பாக சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, பருப்பாமுட்டியால கலந்துட்டே இருந்தோம். மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்பறோமா, கையில தேங்கா எண்ணயத் தொட்டுட்டு , உருண்ட புடிக்க ஆரம்பிச்சோம்.

அவ்வளவு நானுங்க ‘இனிப்பு நரிப்பயிறு உருண்டை ‘ அணியமாயிருச்சு.
இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்டவுங்களுக்கு மட்டுந்தாந் தெரியு.
தெய்வம் உணாவே
எனக்கு வானகம் வந்ததுக்கப்பறந்தா நரிப்பயிறப் பத்தித் தெரியு.
ஆனா அம்மா , சித்தி எல்லா ராகி, கம்பு, சோளம், நரிப்பயிறு போன்றவை பயிராகும் கிராமத்துலதா பொறந்து வளந்தாங்க. அப்ப இதெல்லா முக்கிய உணவுகளா இருந்துச்சாம்.
முன்ன நரிப்பயிறுல இனிப்பு உருண்ட செஞ்சா, 2 மாசோ வரைக்கும் வச்சு சாப்புடுவாங்களாம். கெட்டே போகாதாம்.
மானாவாரி வெள்ளாம பன்றவுங்க, இப்பவே ‘நரிப்பயிற’ வெதைக்காகத் தயார் பன்னிருங்க. இது தரையில மட்டுமே படரும் கொடி ரகம்.
சோளம் மாதிரி தானியங்கள வெதைக்கும் போது, இதயும் கலந்து வெதச்சரலாம். ஓரளவு மழையே போதும். 3-4 மாசத்துல வெளஞ்சுரும்.
பயிறும் கெடைக்கும், கொடி ஆடு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும்.