உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation

உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation

உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation

 
நாகரீகம் மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த  பல்லுயிர் ஒருங்கிணைப்பு ( உயிர்ச்சூழல் பாதுகாப்பு) துண்டிக்கப்பட்டு விட்டது என்பது நிதர்சனமான  உண்மை.
 
 
 
ஒரு 32 வருடம் முன்பு மே மாதம் முதல் டிசம்பர் வரைக்கும் ஊசிதட்டான் , மழைத்தட்டான் , பட்டாம்பூச்சிகள் மஞ்சள்,கருப்பு, சிவப்பு,வெள்ளை என அடர்த்தியாக பறந்து செல்லும் நாங்கள் அனைவரும் பிடித்து விளையாடுவோம்.
 

 

ஈசல்
 அடுத்து ஈசல் இதற்கு ஒருநாள் மட்டுமே வாழ்வு இரவு நேரத்தில் எருக்கு இலைகளை ஒரு சிறிய சில்வர் அண்டாவில்   ஓரத்தில் மண் போட்டு மூடி அருகில் டார்ச் லைட் அல்லது ராந்தல் வைத்து விட்டால் அதில் நிரம்பி விடும் அதை இறகு நீக்கி   காயவைத்து சாப்பிட வைத்துக்கொள்வது வழக்கம்.
 

 

நாய் தேனி
அடுத்து நாய் தேனி. இது சிறிய  வகை தேனிக்கள் இவைகள் மரபொந்துகள் ,கல் இடுக்குகளில் இருக்கும்.  இதை நானும் என் சகோதரன் மற்றும் நண்பர்கள்  சேர்ந்து மிளகாய், பப்பாளி தண்டு, ஊதுபத்தி புகை போன்றவற்றை பயன்படுத்தி இந்த தேனீக்களை விரட்டி விட்டு தேன் எடுத்து சாப்பிடுவோம்
 

 

மின் மினி பூச்சி
இதன் புழு வடிவம் பாப்பாத்தி பூச்சி இது சிவப்பு நிறத்தில் வெல்வெட் போன்று இருக்கும் இது முதிர்ந்து வண்டாக மாறும் நிலை மின்மினி பூச்சி ஆகும் இதற்கு கண்ணாமூச்சி என்ற பெயரும் உண்டு
 
 
குழந்தைகள் கண்ணாமூச்சி ரே ரே என பாடுவதும் இதைத்தான் இதில் வரும் ஒருவகை நொதி புழுக்களை கரைத்து இதன் உருஞ்சு குழல் போன்ற வாயில் உருஞ்சிக்கொள்ளும் தற்போது இதன் இனமே அழிந்து விட்டது இதன்காரணமே கட்டுப்படுத்த முடியாத மக்காச்சோளம் படைப்புழுக்கள்.
 
 
இன்னும் இதில் வரும் வெளிச்சம் வெப்பத்தை ஏற்படுத்தாத நொதிகள் மாவுப்பூச்சியை அழிக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.
 
கரையான்கள் மண்புழுக்கள் இரண்டிற்கும் கண் இல்லை என்றாலும் இலை தழைகளை உடனடியாக மக்கச்செய்கிறது. கடினமான  மரம் மற்றும் மண்புழுக்கள் உண்ண முடியாத கழிவுகளை கரைத்து மண்புழுக்கள் சாப்பிட ஏதுவாக கரையான்கள் மாற்றி தருவது இவைகளின் தனிச்சிறப்பு.
 
கரையான்கள்
கரையான்கள் மண்புழுக்கள் இவற்றை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டுள்ளோம் தெரியாத சில விஷயங்கள் மட்டும் இங்கே.
 
கரையான்
கரையான் புற்று
 
இரண்டிற்கும் கண் இல்லை என்றாலும் இலை தழைகளை உடனடியாக மக்கச்செய்கிறது. கடினமான  மரம் மற்றும் மண்புழுக்கள் உண்ண முடியாத கழிவுகளை கரைத்து மண்புழுக்கள் சாப்பிட ஏதுவாக கரையான்கள் மாற்றி தருவது இவைகளின் தனிச்சிறப்பு.
 
 
 
மண்புழு
 
மண்புழுக்கள் மண்ணை உணவாக உட்கொள்ளாது இவைகள் இலை தழைகள் சாணம் மட்டுமே உண்ணும் அனால் கரையான்கள் மரங்களை கரைக்க மரத்தின் மேல் லெசான சுவர்கள் எழுப்பும் பிறகு அதன் நொதிகள் மூலம் அந்த மரத்தை இலகுவாக்கி அதை கரைத்து உண்ணும் இந்த கரையான்கள் போர்த்திய மண்ணை மண்புழுக்கள் உண்ணும்
 
 
 
கொளவி – இயற்கையால் உருவாக்க பட்ட காவலன்
    இது பலவகைகள் இருந்தாலும் மண்கொளவி அதன் வேலைகள்  மிகவும் நுட்பமானது.
 
இதன் வாயில் ஒரு உருஞ்சு குழல் போன்ற அமைப்பு இருக்கும், இதில் தண்ணீர் உருஞ்சி அதை நல்ல செம்மண் உள்ள இடத்தில் நன்றாக குழைத்து அந்த செம்மண் கலவையை ஒரு பானை செய்வது போன்று கூடு அமைக்கும்.  அதில் காற்று புக ஏற்பாடுகள் உணவு சேகரித்து வைக்கும் ஏற்பாடுகள் அனைத்தும் இருக்கும்.  தனது முட்டை புழுவை (larva) பீய்ச்சி விடும் அந்த முட்டைகள் கொளவியாக மாறி பறக்கும் வரை ஆகும் காலம் வரை அதற்கு உணவு தேவைக்கு புழுக்களை பிடித்து வந்து வைத்து விடும்.
 
அதைவிட எத்தனை கொளவி உருவாகும் எவ்வளவு உணவு எவ்வளவு நாள் என்பதை சரியாக கணித்து சேகரித்து வைக்கும்.  இந்த குளவிகள் செடிகளில் உள்ள புழுக்களை அழித்து பாதுகாக்க இயற்கையால் உருவாக்க பட்ட காவலன் என்றே கூறலாம்
 
சாணிவண்டு
 
இது இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட துப்புறவு தொழிலாளி.  இது இரண்டு மூன்று வண்டுகள் சேர்ந்து சாணத்தை உருண்டையாக உருட்டி அதை மண்ணுக்குள் புதைத்து விடும் முதல் விதைபந்து உற்பத்தியாளர் என்றே கூறலாம்.
 
பண்டைய (இன்றும் மதுரை பகுதியில் பட்டி மாடுகள் உள்ளன) காலங்களில் பட்டி மாடுகள் இருக்கும் இந்த மாடுகள் 100 முதல் 150 மாடுகளை பட்டியில் அடைத்து காலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவர் மாலை பட்டிக்குள் மாடுகள் வருவதற்குள் பாதி சாணத்தை சுத்தம் செய்துவிடும்.
 
விவசாயிகள் கோடைக்காலத்தில் புதர்களை தீயிட்டு கொளுத்தி பிறகு கிடைக்கும் கோடை மழையை பயன்படுத்தி வேளாண்மைக்கு நிலம் தயாரித்தல் நடைபெறும் அப்போது அந்த பகுதியில் புல் விதைகள் அழிக்கப்பட்டு விடும். அந்த சமயத்தில் இந்த சாணவண்டுகள் உருட்டி சென்ற சாண உருண்டையில்  ஒட்டிய புல்விதைகள் 20% விதைகள் அழியாமல் மீட்டுறுவாக்கப்படுகிறது இந்த சாணவண்டுகளால் தான்.
 
இந்த பொக்கிஷங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகளால் அழிக்கப்பட்டு விட்டன.
 
 
காடை
இது கரையான்கள்’, தேள் குஞ்சுகள் , புழுக்களை, சாப்பிடும் இன்னோர் ஜீவன் இது இதன் சிறு சிறு இரகுகள் மழை குளிர் போன்றவற்றை தாங்கும் அளவுக்கு அதன் இறகுகள் (ஒரு கிலோ பிராய்லர் கோழியின் அளவில்) இறகுகள் இருக்கும்.
காடை குஞ்சு
காடை குஞ்சு
காடை
 
இப்படி விவசாய பணிக்கு மறைமுகமாக பயன்படும் எண்ணற்ற  உயிரினங்களை  இரசாயன விவசாய முறைகளால் அழித்து விட்டோம்.  
 
 
 
 
 
ஒரு உயிரினம் மற்றோர் உயிரை சார்ந்து வாழ்கின்றன என்பது தெரியாமலேயே இவையெல்லாம் நாகரீக மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த  பல்லுயிர் ஒருங்கிணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பது நிதர்சனமான  உண்மை.
 
 
 
 
 
 

வரும் காலங்களில் உயிர்ச்சூழல் பாதுகாப்பு (biodiversity conservation)  உருவாக்கா  விட்டால் மனிதகுலம் பேராபத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து

            இயற்கை வளங்களை காப்போம் நன்றி.

    லோகநாதன் .வெ 24/4/2020நம்பியூர்

7 Responses to “உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation”

  1. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியாத தகவல்கள்

  2. இயற்கை விவசாய முறையில் இவற்றின் நன்மைகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா .மேலும் உங்கள் தகவல்களை நோக்கி.”நம் கைகளில் உள்ள பொருள்களை(உயிரிகளின் நன்மைகள்) நாம் இழந்த பின்பு தான் அவற்றின் அளப்பரிய பயன்களை அறிகின்றோம்”.

  3. இயற்கை விவசாய முறையில் இவற்றின் நன்மைகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா .மேலும் உங்கள் தகவல்களை நோக்கி.”நம் கைகளில் உள்ள பொருள்களை(உயிரிகளின் நன்மைகள்) நாம் இழந்த பின்பு தான் அவற்றின் அளப்பரிய பயன்களை அறிகின்றோம்”.