ஐந்திலைக்கரைசல் – மூலிகைப் பூச்சிவிரட்டி
அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
பால்வரக்கூடிய தாவரங்கள் – எருக்கு, அரளி, கள்ளி, காட்டாமணக்கு
கசப்புத்தன்மையுடைய தாவரங்கள் – வேம்பு, சிறியாநங்கை, சீந்தில், தும்பை
கால்நடை மேயாத தாவரங்கள் – ஆடாதொடை, ஆடுதின்னாப்பாளை
மணமுள்ள தாவரங்கள் – நொச்சி, துளசி, பப்பாளி
பூச்சி நோய் தாக்காத தாவரங்கள் – மஞ்சனத்தி, நுணா, நெய்வேலி காட்டாமணக்கு
பெருங்காயம் – 100 கிராம்
கோமியம் – 1லிட்டர்
செய்முறை
மேற்கண்ட ஐந்துவகை இலைகளிலும் வகைக்கு 1கிலோ என ஐந்து கிலோ எடுத்துக்கொள்ளவும்.
↓
இவற்றை உரலில் இடித்து 2லிட்டர் நீர் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கலனில் சேர்க்கவும்.
↓
பின்னர் இத்துடன் 1லிட்டர் கோமியம் மற்றும் 100கிராம் பெருங்காயத்தை சேர்க்கவும்.
↓
ஏழு நாட்கள் வரை இதை நிழலில் வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
5% கரைசலாக (10லி டேங்கிற்கு 500மிலி கரைசல்) பயன்படுத்தலாம்.
பயன்கள்
அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.