கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள்

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி (கால்நடை வியாபாரிகளின் ரகசிய சங்கேதச்  சொற்கள் குறியீடுகள்)

கால்நடை வியாபாரிகளின் ரகசிய குறியீடுகள்

விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை.

அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை.

ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள்.

அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள்.

அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது.

எனக்குத் தெரியாது.

தெரிந்த நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த சங்கேதச் சொற்களையும் அதற்கான துகைமதிப்பையும் இங்கு பகிர்ந்தால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

உதாரணமாக ஆழி, தட்டை, வாச்சு, முறி, பொருத்து, போன்றவை.

சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் பேசப்படும்,

“விலை பற்றிய ரகசிய  பேச்சுகள்”…

வாச்சி−100
ஆனிமுறி−150
காளை−200,2000,20000,
காளைமுறி−250,2500,25000,
தொழுது−300,3000,30000,
தொழுதுமுறி−350,3500,35000,
பனயன்−400,4000,40000,
சதுப்பான்−400,4000,40000,
பனயமுறி−450,4500,45000,
சதுப்பாமுறி−450,4500,45000,
தட்டை−500,5000,50000,
தட்டைமுறி−550,5500,55000,
பொறுத்து−600,6000,60000,
பொறுத்துமுறி−650,6500,65000,
ஆழி−700,7000,70000,
ஆழிமுறி−750,7500,75000,
வழுவு−800,8000,80000,
வழுவுமுறி−850,8500,85000,
தாயம்−900,9000,90000,
தாயமுறி−950,9500,95000,
துருவம்−1000,10000,100000
துறுவமுறி−1500,15000,150000
பாறை−1000,10000,100000,
பாறைமுறி−1500,15000,150000..

by Subash Krishnasamy