குளவி தேனீ பயன்கள்

குளவி தேனீ பயன்கள் :
இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது..

இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது..

ஆஹா ..!
தேனீக்களோட உழைப்பை திருடி சுவைத்தாலும் ,
என்ன சுவை
என்ன சுவை..!!

இதே போல இப்போ எங்க தென்னை மரத்திலும் குளவிகூட்டை அதிகமா பார்க்க முடியுது..

குளவி அதிகமாக காரணம்
பயிருக்கு நச்சு தெளிப்பதில்லை என்பதைவிட,
தென்னைமரம் ஏறி காய் போடுவதில்லை..

அதுவாக முற்றி ,காய்ந்து விழும் காய்களை எடுத்து வச்சுக்கிறோம்..
அதனால் சாதாரணமா நான்கு மரத்துக்கு ஒரு குளவி கூட்டை பார்த்திடலாம்..

இதே மரம் ஏறி காய் போடுவதாக இருந்தால் எறும்புக்குழி பவுடர்னு சொல்லக்கூடிய BHC நச்சை தூவி தேன் கூட்டையும், குளவிகூட்டையும் அழிச்சுட்டுத்தான் மரமே ஏறுவாங்க..
இல்லைனா கொட்டிடுமாம்..!!

சரி குளவியோட பயன்கள் என்னு பார்க்கலாம்..

இயற்கையாகவே காணபடக்கூடிய இக்குளவிகள் கரும்பின் நுனி குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, நெல்லின் சுருட்டுப்புழு, பருத்தியில் காய்புழு போன்றவற்றின் முட்டைகளைத் துளைத்து முட்டைகளைவைக்கும்.

முதிர்ந்த குளவிகள்
சுருட்டுபுழுவின் முட்டையைக் குத்தி அதில் தனது முட்டைகளை வைக்குமாம்..

அப்படியே குளவிகளின் முட்டைகள் உள்ளேயே பொறித்து குளவிகளாக வெளியே வந்திடும்..

அப்போ குளவிகளால பயிருக்கு தீமைசெய்யும் புழுக்களை எப்படி எல்லாம் கட்படுத்துனு பாருங்க..

குளவி நம்ம தோட்டத்துல இந்த வேலையை செய்திடுது.
பிறகு எதற்கு நாங்க பூச்சி விரட்டி தயார் செய்யனும்.?
அவசியமில்ல.
இதுவரை தயாரித்ததுமில்ல..

சரி அப்போ தேனீயோட வேலை..

வேற என்னங்க மகரந்த சேர்க்கைதான்..
வாழைபூவை ஒடிக்காததால்
வாழை அறுவடை வரைக்குமே பூவில் தேனீக்களை எங்க தோட்டத்தில் பார்க்கலாம்..

இப்போ அறுவடையான பழங்களைவிட
அடுத்த கட்டைவாழையின் அளவையும் ,
சுவையும் பாருங்க இன்னும் கூடுதலாதான் இருக்கும்ங்க..

இப்படி இயல்பா ,
இயற்கையா நடப்பதை நம்ம எப்படி சிதைச்சு வச்சிருக்கோம்னு நினைத்தால் தூக்கம் வர்ரதில்லை..

சரி நடந்ததை நினைத்து ஒருபயனுமில்லை..
நடப்பதை பற்றி இனி யோசிப்போம்னுதான் இந்த பதிவு..

உங்களுக்கு ஒன்னு தெரியுமா..?

தன்னோட உழைப்பு களவு போவதை தெரிஞ்சும் இந்த உலகில் ஓயாமல் உழைக்கும் இரண்டே ஜீவன்கள் எது தெரியுமாங்க?

ஒன்னு தேனீ..!
இன்னொன்னு விவசாயி..!!

இயற்கை விவசாயிகள் நாங்க ஓரளவுக்கு தெளிஞ்சிட்டோம்ங்கிறத நினைக்கும் போது
களவுபோகும் உழைப்பும் சுகம்தான் இருக்கு..!!