தாவரங்களில் 108 தனிமங்கள்

தாவரங்களில் 108 தனிமங்கள்

தாவரங்களில் 108 தனிமங்கள்

இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது.

இந்தியாவில் துளசி மாலை அணிகிறார்கள், இந்த மாலையில் 108 மணிகள் உள்ளன. மேலும் இந்திய தத்துவ ஞானிகள் பிரபஞ்சத்தை தோராயமாக 27 நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர், ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்கள் உள்ளது. அப்படியானல் மொத்தம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலிருந்தும் பிரபஞ்ச சக்தி வருகிறது. இது உயிரின வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது. தாவர உடலின் இந்த 108 தனிமங்கள் எல்லாமும் ஒரே அளவு விகிதத்தில் இல்லை. அதன் விகிதத்தை பொறுத்து இந்த 108 மூலப்பொருட்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறோம்,

1 வது பிரிவு – கார்பன், ஹைட்ரஜன், ஆச்கிஜன் போன்றவை இவை தாவர உடலில் 98.5 சதவீதம் ஆகும்.

2 வது பிரிவு – நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ்

3 வது பிரிவு – கால்சியம், மக்னீசியம், கந்தகம்

4 வது பிரிவு – மீதி உள்ள அனைத்து 99 தனிமங்களும் 4வது பிரிவில் சேர்க்கிறோம் அது நுண் ஊட்ட சத்துக்கள் என்கிறோம்.

முதல் பிரிவில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவை 98,5 சதவீதம் தாவர உடலில் இருக்கிறது, இது இயற்கையால் காற்று மற்றும் நீரிலிருந்து எளிதாக வழங்கப்படுகிறது என்பதால் இவற்றைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

*இரண்டாவது பிரிவு நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ்*
நைட்ரஜன் 4வது மிக முக்கிய மூலப்பொருளாகும். இது இயற்கையால் கொடுக்கப்படுகிறது. காற்று மண்டலம் நைட்ரஜனின் கடலாக இருக்கிறது, இது 78.5 சதவீதம் நைட்ரஜனைக் கொண்டுள்ளது. இயற்கை கடவுளின் படைப்பு அடர்ந்த காடுகளில் எந்த ஒரு தாவரத்தின் இலையை எடுத்து ஆய்வகத்தில் பரிசோதித்தால் அதில் ஊட்டசத்துக் (நைட்ரஜன்) குறைபாடு இல்லை என்பதை காணமுடியும். அப்படியானால் நைட்ரஜன் தாவரத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது உண்மை.
.
இலைகள் நைட்ரஜனை காற்றில் இருந்தும் எடுத்துக் கொள்வதில்லை, இலைகளுக்கு நைட்ரஜன் தேவையெனில் காற்றில் இருந்து நைட்ரஜனை எடுக்க முடியாது இருந்தும் நைட்ரஜன் கிடைக்கிறது, இது எப்படி கிடைத்தது. வேர்களுக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள், அவர்கள் காற்றிலிருக்கும் நைட்ரஜனை எடுத்து வேர்களுக்கு வழங்கியுள்ளார்கள், அவர்கள் யார்?

இந்த நைட்ரஜன் கொடுக்கும் முன்றாவது மனிதர்கள் நன்மை செய்யும் நுண்ணுயிர்களாகும். இவற்றை நைட்ரஜன் நிலைப்படுத்தும் பேக்டீரியா என்கிறோம். தாவரத்திற்கு நைட்ரஜன் கொடுக்கும் திறனை இந்த பாக்டீரியாக்களுக்கு இயற்கை வழங்கியுள்ளது. அப்படியானால் நாம் யூரியா பயன்படுத்துவது என்பது இயற்கையின் விருப்பத்திற்கு மாறானது.

இவ்விதம் நைட்ரஜன் நிலைப்படுத்தும் பேக்டீரியாக்கள் இடண்டு முறைகளில் நடக்கிறது. 1. கூட்டுவாழ்வு முறை 2. கூட்டுவாழ்வில்லா முறை. இயற்கை காற்றில் இருந்து நைட்ரஜனை எடுத்துக் கொடுக்கும் வேலையை கூட்டுவாழ்வுடைய மற்றும் கூட்டுவாழ்வற்ற நுண்ணுயிர்களுக்கு வழங்கியுள்ளது. கூட்டுவாழ்வு பேக்டீரியா இருவித்திலை பயறு வகைத்தாரவத்தின் வேர்களிலும், கூட்டுவாழ்வற்ற பாக்டீரியா ஒரு வித்திலை தாவர வேரின் அருகிலும் உள்ளது.

*கூட்டுவாழ்வு முறையில் symbiotic bacteria)* பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள் இதில் பங்கு பெறுகின்றன. உதாரணம் பின்வருமாறு பாக்டீரியா – ரைசோபியம், பூஞ்சை – மைக்கோரைசா, ஆல்கா – நீலப்பச்சை பாசி

கூட்டுவாழ்வு பாக்டீரியா இருவித்திலை பயறுவகைத் தாவரத்தில் வேர் முடிச்சுகளில் வசிக்கின்றன, லெகுமினோசி-பாப்பிலியோனேசி தாவரக் குடும்பம் இது அனைத்து வகை பயறு வகைகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக பச்சைப்பயறு, உளுந்து, தட்டை, கொள்ளு, கொண்டைக் கடலை, பட்டாணி, வேர்கடலை, பீன்ஸ் வகைகள். முருங்கை, உரக்கொண்றை (கிளைரிசிடியா) சணப்பு, அகத்தி, சித்தகத்தி, மஞ்சள் கொன்றை, சரக்கொண்றை மற்றும் பிற இருவித்திலை தாவரக் களைகள் போன்றவை. இதன் வேர்களில் முடிச்சுகள் காணப்படும் இந்த முடிச்சுகளில் பாக்டீரியாக்கள் உள்ளது.

புரதம் தயாரிக்க இலைகளுக்கு நைட்ரஜன் தேவைப்படும்போது இலைகள் வேர்களுக்கு செய்தி அனுப்புகின்றன, அந்த செய்தியை வேர்கள் நைட்ரஜன் நிலைப்படுத்தும் பேக்டீரியாக்களுக்கு அனுப்புகிறது. அப்போது இந்த பேக்டீரியாக்கள் நைட்ரஜனை எடுத்து வேர்களிடம் கொடுக்கிறது. இந்த சேவைக்கு பதிலாக வேர்கள் பேக்டீரியாக்களுக்கு சர்க்கரையை உணவாகக் கொடுக்கின்றன, இந்த பரிமாற்றம் செய்யும் முறையை கூட்டுவாழ்வு முறை நைட்ரஜன் நிலைப்படுத்தல் என்கிறோம்.

*கூட்டுவாழ்வற்ற நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியா (Non symbiotic bacteria)* இவை வேர்களுக்கு நைட்ரஜனை கொடுத்தாலும் பதிலுக்கு சர்க்கரையைப் பெறுவதில்லை. இவற்றில் 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை அசெட்டோபேக்டர், அசேட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், ப்ராங்கியா, சூடோமோனாஸ் மற்றும் பல பேக்டீரியா வகைகள்.

இந்த கூட்டுவாழ்வற்ற பேக்டீரியாக்கள் வசிப்பது ஒரு வித்திலை தாவரங்களின் வேர் பகுதியின் அருகில் வசிக்கின்றன. நெல், கோதுமை, சோளம், கம்பு, தினை, மக்காச்சோளம், கேழ்வரகு மற்றும் பல சிறு தானியங்கள் வேர்கள் அருகில் இவைக் காணப்படுகின்றன. மேலும் பருத்தி, சூரியகாந்தி, ஆலிவிதை, எள்ளு, பிற ஒருவித்திலை தாவரம் மற்றும் எண்ணை வித்துத் தாவரங்களில் காணப்படுகிறன.

இலைகளுக்கு நைட்ரஜன் தேவைப்படும் போது வேர்களுக்கு தகவல் அனுப்புகின்றன. வேர்கள் இத்தகவலை பாக்டீரியாக்களுக்கு அனுப்புகின்றன. பேக்டீரியாக்கள் இத்தகவலைப் பெற்றதும் இவை நைட்ரஜனை சேகரிக்கின்றன, ஆனால் வேர்களில் சேர்ப்பதில்லை வேர்களுக்கு அருகில் மட்டுமே வைக்கின்றன. வேர்கள் இவற்றை எடுத்து புரதம் தயாரிக்க இலைகளுக்கு அனுப்புகின்றன.

மைக்கோரைசா பூஞ்சைக்கு பல கரங்கள் உள்ளன, இருவித்திலைத் தாவரங்களின் வேர்களின் இவை படர்ந்து மண்ணிற்குள்ளும் பரப்பி உள்ளன. மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்து அவற்றின் உடலில் பதப்படுத்தி வேர்களுக்கு கொடுக்கிறது. நெல் சாகுபடியில் நீலப்பச்சை பாசி வேர் முழுவதும படர்ந்து நீரில் இருக்கும் காற்றுக் குமிழிகளிலிருந்து நைட்ரஜனை எடுத்து வேர்களுக்கு கொடுக்கின்றன.

நீலப்பச்சை பாசி நெல்களத்தில் இல்லாவிட்டால் மற்றொரு பூஞ்சை உபயோகமாக இருக்கும் அது நெல்பயிரின் க்ளோமஸ் பூஞ்சையாகும் அது வேர்மேல் படர்ந்து நீர் குமிழியில் இருந்து நைட்ரஜனை எடுத்து வேர்களுக்கு கொடுக்கிறது.

சாகுபடியின் போது நீர்தேங்கி நிற்கவில்லை என்றால் அப்போது நீலப்பச்சை பாசியும், குளோமஸ் பூஞ்சையும் செயல்பாடாது. ஆனால் அசட்டோபேக்டர், அசோஸ்ஸ்பைரில்லம் போன்ற கூட்டுவாழ்வற்ற பாக்டீரியாக்கள் செயல்பட்டு வேர்களுக்கு தேவையான நைட்ரஜனைக் கொடுக்கின்றன.

கூட்டுவாழ்வு மற்றும் கூட்டுவாழ்வற்ற பேக்டீரியாக்கள் சேர்ந்து பணிசெய்தால் மட்டுமே நைட்ரஜன் கிடைக்கும், அதாவது இரண்டையும் செயல்பட வைக்க வேண்டும். இதனால் இருவித்திலைத் தாவரத்தின் இடையில் ஒருவித்திலைத் தாவரங்களை ஊடுபயிர் செய்யவேண்டும், ஒருவித்திலை தாவரங்கள் இடையில் இருவித்திலைத் தாவரங்களை ஊடுபயிகளை செய்யவேண்டும்.

முருங்கை, துவரை, உரக்கொண்றை, அகத்தி, சித்தகத்தி, தட்டைப்பயறு, நரிப்பயறு, கொள்ளு, இவற்றை பழத்தோட்டத்தில் ஊடுபயிராக செய்ய வேண்டும், கரும்பில் பருவத்திற்கேற்ப பச்சைப்பயறு, உளுந்து, தட்டை, வேர்கடலை, கொண்டைக்கடலை, பீன்ஸ் மற்றும் பிற பயறுவகைகளை ஊடுபயிர் செய்யவேண்டும்
பருத்தியில் சூரியகாந்தி, ஆமணக்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி, தக்காளி, கோஸ், பூக்கோஸ், வெண்டைக்காய், போன்றவற்றை பருவத்திற்கு ஏற்ப ஊடுபயிர் செய்ய வேண்டும், உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, சோயா பீன்ஸ், வேர்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றையும் பருவத்திற்கேற்ப ஊடுபயிர் செய்யவேண்டும்,

இந்த கூட்டுவாழ்வு மற்றும் கூட்டுவாழ்வற்ற நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் தயாரிக்க முடியாது. ஆய்வகத்தில் செல்பகுப்பு மற்றும் நடக்கலாம் ஆனால் உண்மையில் உருவாவதில்லை. கடவுள் இந்த நுண்ணுயிர்களை உருவாக்க ஒரு தொழில் சாலை உருவாக்கியுள்ளார். அது நாட்டு பசுமாட்டின் குடலாகும்.

நாட்டுப் பசுமாட்டின் குடல் வழியாக சாணம் பயணம் செய்யும் சாணத்தில் இந்த இரண்டு வகை பேக்டீரியாக்களும் சேர்கிறது. இந்த சாணத்தில் இருந்து நாம் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் தயாரிக்கும் போது இந்த பேக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பெரிய அளவில் பெருகுகின்றன, நாம் மண்ணில் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் இடும்போது இவ்விரண்டு பேக்டீரியாவும் மண்ணில் சேர்கின்றன அவை நைட்ரஜனை காற்றில் இருந்து எடுத்து வேர்களுக்கு தேவையான அளவு கொடுக்கின்றன.

நாம் யூரியா, அமோனியம் சல்பேட் மற்றும் பிற நைட்ரஜன் உரங்களை நிறுத்த வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும் ஒருவித்திலைப் பயிர்களில் இருவித்திலை ஊடுபயிர் செய்யவேண்டும, இருவித்திலைப் பயிர்களில் ஒருவித்திலை பயிர்களை ஊடுபயிர் செய்ய வேண்டும். மற்றொன்று பயிர்களுக்கு ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.

*சுபாஷ் பாக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி*
*ஈஷா விவசாய இயக்கம்*
*06.02.2019 / Morning*