தென்னையில் திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?

தென்னையில் திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?

அன்புள்ள விவசாய சொந்தங்களே

தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?

 

மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி அந்த காய்கள் உதிராமல் பலன் தர வேண்டுமா?

 

மல்லிகை, சம்பங்கி மலர்சாகுபடியில் பெரிய பளபளப்பான பூக்கள் வேண்டுமா?

 

எளிய தீர்வு:

உங்கள் நிலத்தின் அருகாமையில் விளைந்த வெள்ளை அல்லது சிவப்பு ஒடித்தால் பால் வரும் இளம் எருக்கினை பூ,இலை,தண்டு என அனைத்தையும் பொடியாக வெட்டி ஒவ்வொரு மரத்தூரிலும் இரு கை குவித்த அளவில் இரண்டு கை அளவு இட்டு, மண் மூடி, பாசனம் செய்யவும்.
அல்லது வெட்டிய துண்டு எருக்கினை துணிப்பையில் கட்டி நீர் செல்லும் பாதையில் போட்டு வைக்கலாம்.

வறட்சியால் எருக்கு எளிதில் காய்ந்து விடும்.

உடனடியாக செய்யுங்கள்

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்