தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில்

தென்னை ஈரியோபிட் கரையான் coconut tree

அறிவிப்பு:
போதுமான அளவு தினசரி பாசன நீர் கிடைக்காத தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில் கீழ்கண்ட முயற்சிகளை செய்யலாம்.

1. அவசர காலங்களில் ஒரு தென்னை மரத்திற்கு வாரம் ஒரு முறை 30 லிட் தண்ணீர் கொடுத்தால் கூட போதும். அதனை வெறும் தண்ணீராக கொடுக்காமல் இயற்கை இடுபொருளுடன் கொடுப்பது நல்லது. ஒரு லிட்டர் ஈயம் கரைசல் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் திறன் ஊட்டப்பட்ட நுண்ணுயிர் கரைசலை 7 நாட்களில் உருவாக்கலாம். 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட் இ.எம் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தென்னை மரங்களுக்குப் பாய்ச்சலாம்.
2. ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை கிணற்றுக்குள் ஊற்றி பின்பு கிணற்றிலிருந்து பாய்ச்சுவதாக இருந்தால், இந்த முறையை கிணற்று நீரிலையே கலந்து எளிமையாகப் பயன் படுத்தலாம். இதனால் வெறும் நீர் செல்வதை விட ஊட்டச் சத்தாகவும், ஒருவேளை டேங்கரில் கொண்டு வரும் தண்ணீர் உப்பாக இருந்தாலும் அது மாறிக் கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
3. டேங்கரில் தண்ணீர் கொண்டு வந்து நேரடியாக தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவதாக இருந்தால் அந்த டேங்கர் நீரிலேயே இத்திரவத்தைக் கலந்து கொடுக்கலாம்.
4. தென்னை மரத்தின் வட்டப் பாத்தி அல்லது வேர் பகுதி ஈரமான பின்பு அந்த ஈரத்துடன் ஒரு மரத்திற்கு தலா 50 மில்லி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, மீன் அமிலம் கலந்து ஊற்றி விடலாம் அல்லது ஐந்து லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அமுத கரைசல் கலந்து கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் உடனடி சக்தி தென்னை மரங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.
5. மேற்கூறிய உயிரியல் திரவங்கள் திரவமாக கிடைக்காதவர்கள் குறைந்த விலையில் பவுடராகக் கூட கிடைக்க வாய்ப்புள்ளது.
6. 500 அல்லது 1000 HDPE டேங்குகளில் டேங்கர் தண்ணீரை சேகரித்து பின்பு திரவங்களை கலந்து பின்பு மரங்களுக்கு மாலை வேளையில் மரத்திற்கு 20 லிட்டர் என்ற அளவில் கொடுத்தால் கூட போதும்.
7. ஒரு மரத்திற்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியாவை 100 மில்லி தண்ணீருடன் கலந்து வேரில் கட்டி விடலாம்.

முக்கிய செய்தி
1. அவசரப்பட்டு நீண்ட காலமாக பராமரித்த தென்னையை வெட்டாதீர்கள்.
2. அடுத்த வாய்ப்புகளை தேடுங்கள்.
3. குறுகிய காலத்தில் மழை கிடைக்க வாய்ப்புண்டு.

இந்த அறிவிப்புகளை முடிந்த அளவு அனைத்து குழுக்களிலும் பகிரவும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரவும்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட 9944450552 என்ற எண்ணில் தொலைபேசி, whatsapp, telegram தலங்களின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Sebastian Britto