பயிர்களில் வைரஸ் நோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும்.

எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது .

கொறானா வைரஸ் கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களையே பெரிதும் தாக்கியது. அதுபோலதான் பயிர்களிலும்.

1. ஒவ்வொரு பயிருக்கும் பயிர் செய்யும் முன்பு நிலத்தினை முறையாக முக்கால் அடி ஆழம் வரை இறங்குமாறு உழவேண்டும் .இதனால் மண்ணில் அரை அடி ஆழத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளின் கிருமிகளை வெயிலில் வைத்து அளித்து விடலாம்.

2)நிலத்தின் தன்மைக்கேற்ப அடி உரம் கொடுக்க வேண்டும்.
அடி உரம் கொடுக்கும்போது முறையான அளவு வேப்பம் புண்ணாக்கு(100 கிலோ ஒரு ஏக்கருக்கு) சூடோமோனஸ்,(2 கிலோ) போன்றவற்றை கலந்து தரைவழிப் பரப்பி, உழுது பின்பு விதை நடவேண்டும்.

3. நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து நடவேண்டும். வீரியமற்ற வயதான பழைய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத விதைகளை அல்லது கன்றுகளை பயிரிடுவதால் எளிமையாக வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகும்.

4. விதைத்த அல்லது கன்று நட்ட நாளிலிருந்து முறையான இயற்கை இடுபொருட்களை தொடர்ந்து தரை வழி தர வேண்டும். பெரும்பாலான பயறுவகை பயிர்களில் நிறைய பகுதிகளில் முதல் 20 நாட்கள் வரையும் பப்பாளி போன்ற தோட்டக்கலை சாகுபடியில் மூன்று மாதம் வரைகூட எந்த இடு பொருளும் கொடுக்காமல் விவசாயிகள் வளர்க்கின்றனர் .

மண்ணில் சத்து கிடைக்காத போது காற்றின் மூலம் பரவும் மற்றும் நிலத்தில் ஏற்கனவே தங்கியுள்ள வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு பயிர்கள் சாகின்றன.
எனவே வைரஸ் நோய் வராமல் தடுக்க முறையான உழவு, நல்ல திடமான விதை தேர்வு ,நல்ல போதுமான அளவு ஊட்டச்சத்து மேலாண்மை,முறையான பாசனம் போன்றவை முக்கியம்.

*வைரஸ் கிருமிகளை தீர்ப்பதற்கு*

1. முதலில் நிலத்தில் எறும்புகள் இருந்தாலும் அவற்றை வசம்பு கரைசல் தெளித்து அகற்றிவிடவேண்டும். எறும்பு புற்றுகள் இருந்தால் சுடு தண்ணீர் ஊற்றி அளிக்கலாம். ஏனெனில் எறும்புகளே வைரஸ் கிருமிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்பவை ஆகும்.

ஆரம்பகால பாதுகாப்பு

2) ஆரம்பகால பாதுகாப்புக்காக ஐந்தரை லிட்டர் தண்ணீருடன் முக்கால் கிலோ அளவுள்ள வேகவைக்காத மஞ்சளை அரை லிட்டர் தண்ணீர் சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்து ஆற வைத்து அதிலிருந்து  அரை லிட்டர் திரவத்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம். இதனை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது. ஆரம்பகால வைரஸ் தாக்கத்திற்கு இது பெரிதும் எதிர்பாக அமையும்.

தீவிர பாதிப்பை கட்டுப்படுத்த:

3) மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிர்களில் பெர்பெக்ட்(perfect) எனப்படும் தாவர சாறு கரைசலை லிட்டருக்கு 2 மில்லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம். இதையும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தெளிக்க வேண்டும்.

இம்முறைகளை கடைபிடிக்கும் போது போதுமான அளவு மீன் அமிலம், இஎம் கரைசல், பஞ்சகாவியா ,ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை வாரமிருமுறை தொடர்ந்து தரைவழி தரவேண்டும்.

பத்து லிட்டருக்கு அரை லிட்டர் என கலந்து பஞ்சகாவியா வையும் 75 மில்லி என மீன் அமிலத்தையும் கலந்து தெளிக்கலாம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்.