மா விவசாயிகள் கவனத்திற்கு

மா விவசாயிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

மாமரத்தில் பூ எடுத்த நிலையில் உள்ள இடங்களில் அல்லது சிறிய மொட்டுகளாக மாம்பிஞ்சு உருவான இடங்களில், பூஞ்சைத் தொற்றை தவிர்க்க 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் என்ற திரவத்தை ஒட்டும் திரவமாக அரிசி வடிகட்டிய கஞ்சி அல்லது மைதா மாவு கலந்து ஒரு முறை தெளித்து கொள்ளவும்.

இதனால் பூக்களில் பூஞ்சை தொற்று வருவதை தவிர்க்கலாம் .மாம்பிஞ்சு கிளைகளுடன் ஒட்டியிருக்கும் இடங்களில் வரும் அழுகலை தவிர்க்கலாம்.

வாய்ப்பு இருக்கும் விவசாயிகள் அருகிலுள்ள எருக்கலை செடியை 200 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ துண்டு துண்டாக நறுக்கி 5 நாட்கள் ஊறவைத்து பின்பு வடிகட்டி அந்த நீரை அப்படியே அல்லது சமமான அளவு தண்ணீருடன் கலந்து மரங்கள் மேல் தெளிக்கலாம்.

ஆரம்ப காலங்களில் அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் போன்ற குறைந்த விலை திரவங்களை போதுமான அளவில் தயார் செய்து 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கலந்து மாலை வேளைகளில் மரங்கள் மேல் நன்கு தெளித்து கொள்ளுவது மிகவும் நல்லது. இதனால் மாம்பிஞ்சு உதிர்வதை தடுக்கலாம்.

பூக்களிலிருந்து காய்கள் உருவாகி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று முறை 10 லிட்டருக்கு அரை லிட்டர் கலந்து தேமோர் கரைசல் தெளிக்கலாம் அல்லது 100 முதல் 200 மில்லி கலந்து இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியா தெளிக்கலாம்.
இதனால் பயிர்களுக்கு பிஞ்சு உருவாகும் போது உடனடி சத்து கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் பிஞ்சு உதிர்வதைத் தடுக்கலாம்.

வரும் மாதங்களுக்கு தேவையான மீன் அமிலம், இஎம் கரைசல், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் மொபைலைசிங் பாக்டீரியா போன்ற காய்களின் பெருக்கத்திற்கு தேவைப்படும் இயற்கை இடுபொருட்களை போதுமான அளவில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிப்ரவரி மாதம் பணியின் காரணமாக அந்த எனப்படும் உச்சக்கட்ட அலைகள் மரங்களில் வர வாய்ப்பு உண்டு மேலும் பழைய அல்லது கதிர் நாவாய் பூச்சியால் காய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதற்கு எதிரான இயற்கை வழி பாதுகாப்பு திரவங்கள் மற்றும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து பிடிக்கும் பழகி ஒரு சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி போன்ற முறைகளை இப்போது இருந்தே கடைபிடிக்க வேண்டும்.

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்