மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்

மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்
நெற்பயிரில் தண்டுதுளைப்பான்(குருத்துபூச்சி),ஆணைக்கொம்பன்,வெட்டுக்கிளி,பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு,இலைப்பேன், கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க(வந்துட்டுனா பகுதியளவுதான் போக்கமுடியும்) பயன் படுத்தபடும் திறன்மிகுந்த கரைசல் தான் மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்.
சேர்வைபொருட்கள்: (18)
ஒடித்தால் பால்வரகூடிய,நுகர்ந்தால் நாற்றம் வரக்கூடிய,ஆடு திண்ணாத இலைவகைகள் பத்து
1.ஊமத்தை இலை
2.ஆமணக்கு இலை
3.சீத்தா இலை
4.நொச்சி இலை
5.ஆடாதொடை இலை
6.ஆடுதிண்ணாபாலை இலை
7.பீச்சலாத்தி இலை
8.புங்கன் இலை
9.தைலமர இலை
10.எருக்கு இலை
இவற்றில் ஒவ்வொன்றும் ஒருகிலோ அளவு எடுத்து இடித்தோ அல்லது நறுக்கியோ 50லிட்டர் மாட்டுகோமியத்தில் ஊறவைக்கவும்.
(11.நாட்டுமாட்டு சிறுநீர்)
இந்த கரைசலோடு
12.ப.மிளகாய்-1 கி
13.பூண்டு-1/2 கி
14.இஞ்சி -100
அரைத்து விழுதாக்கி சேர்க்கவும்
இதனோடு
15.சோற்றுகற்றாழை-5 இதழ்
16.பேக்கொம்படிகாய்-10
கூழாக்கி சேர்த்து 40 நாட்கள் ஊறவைக்கவும்.இரண்டு மூன்று நாட்கள் இடைவெளில் கலக்கிவிடவும்.
நாப்பதாவது நாள் இதனை வடிகட்டி 10 லிட்டருக்கு அரைலிட்டர் வேப்பெண்னை கலந்து அதனொடு அரை காதிசோப்பை நன்றாக கரைக்கவும். இது வேதிப்பொருட்கள் சேர்மானமில்லாத சோப். அதோடு இது வேப்பெண்னை தண்ணீரில் ஒன்றுகலக்கவும். பூச்சுவிரட்டி கரைசல் இலைகளின் மேல் ஒட்டிக்கொள்ளவும் பயன்படும்.
(17.வேப்பெண்னை-1/2 லி)
(18.காதிசோப்)
பயன்படுத்தும் அளவு:
இவ்வளவு வேலைகளில் ரொம்ப ரொம்ப முக்கியமான அரங்கேற்றம் இதான் இங்க புட்டுகிச்சினா எல்லாம் போச்சி.
தண்ணீரில் பத்து சதவீதம் மட்டும்தான் இந்த கரைசல் கலக்கனும். அதாவது சாதரண பத்துலிட்டர் கை ஸ்பிரேயருக்கு கலவைக்கு ஒரு லிட்டர் பூச்சுவிரட்டி,15 லிட்டர் பேட்ரி ஸ்பிரேயருக்கு கலவைக்கு 1.5 லிட்டர் பூச்சுவிரட்டி.இதற்குமேல்பயன்படுத்த கூடாது…
அதான் மாடு மூத்தரம் பேயிது வாய்க்காவரப்புல மேலசொன்ன எலையெல்லாம் கெடக்குனு பறிச்சிவச்சி பூச்சிவிரட்டி கலவைய பத்துக்கு அஞ்சுனு போட்டுதெளிச்சா பயிறு ஒட்டுமொத்தமா கருகிடும் அப்பறம் அறுவடைக்கு ஆள்தேடவேண்டியதில்ல…
ஏற்கனவே பத்துகிலோ யூரியா தெளிச்ச எடத்துல ஒரு மூட்ட யூரியாதெளிச்சி பச்சைபாத்த பவுசுல அந்த வேலைய இங்க காட்டிற வேண்டாம்
இதே எச்சரிக்கை மீன்அமிலத்துக்கும் உண்டு அது பத்துலிட்டருக்கு 100ml தான் போடனும்
மீன்அமிலம் 100மிலி/10லி தண்ணீர்
திறன்மிகுபூச்சிவிரட்டி 1லி/10லி தண்ணீர்
பஞ்சகவ்யா 1/2லி/10லி தண்ணீர்
அமுதகரைசல் -பாசணத்தில் விடவேண்டும் ஒரு பாய்ச்சலுக்கு 100லி/ஒருஏக்கர்
தேமோர்கரைசல் 1லி/10லி தண்ணீர்