வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அன்புள்ள விவசாய சொந்தங்களே எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு ஒரு சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1. வட மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை பயிர்களான மா கொய்யா மற்றும் எலுமிச்சை விவசாயிகள் அதிக காற்றினால் மரங்கள் சாய்ந்து மரங்களை இழக்கும் நிலை உள்ளது அதிக அடர்த்தியை குறைக்கும் வண்ணம் தேவையற்ற கிளைகளை குறைப்பது மற்றும் மரங்களுக்கு மண் அணைத்து பாதுகாக்கலாம்.
2. நெற்பயிருக்கு முட்டை கரைசல் தயார் செய்து இருமுறையாவது கொடுப்பது காற்றினால் நெற்பயிர் சாய்ந்து பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறையும்.
3. சரிவு குறைவாக உள்ள நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் இப்போதே முறையான வடிகால்கள் இருக்கும் வகையில் கரைகளை மாற்றி அமைத்து நீர் எளிதில் வெளி செல்லும் வகையில் திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.
4. அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கிராம நிர்வாக அலுவலர் போன்றோரின் தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது நல்லது.
5. எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் கைபேசியில் உள்ள நோட் கேம் என்ற செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலம் புகைப்படம் எடுத்து அலுவலகங்களில் சமர்ப்பிப்பது எளிமையாக நிவாரணம் பெற வசதியாக இருக்கும்.
6.கால்நடைகளை முறையாக பாதுகாக்கும் வண்ணம் அதன் கொட்டகைகளை சரி செய்து கொள்வது நல்லது. அதற்கான தீவனங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
7. முடிந்தவரை மெழுகுவர்த்தி கொசுவர்த்தி சுருள் தீப்பெட்டி போன்றவற்றை பாலிதீன் கவருக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
8. தென்னையில் அதிகமாக உள்ள ஓரளவுக்கு முற்றிய காய்களை வெட்டி எடுத்துவிடுவது நல்லது.
9. அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களில் இருந்து சூடோமோனாஸ் ,விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற இயற்கை பாதுகாப்பு பொருள்களில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 2 கிலோ என்ற வீதத்தில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Telegram Groups
9944450552