விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்

விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்

‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’

என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம்.

ஆட்டு எருவின் 10 பயன்கள்:
  1. ஆட்டு எருவில் அங்கக சத்துக்கள் நிறைந்துள்ளன.
  2. மண் வளத்தை கூட்டும்
  3. நுண்ணூட்டங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்
  4. பயிருக்கு பாதுகாப்பானது
  5. பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது
  6. மாட்டு எருவை விட இரண்டு மடங்கு சத்துக்கள் உள்ளன
  7. பயிருக்கு தேவையான தழைச்சத்துக்களை ஓரே சீராக கொடுக்கக் கூடியது
  8. பயிரின் வளர்ச்சி ஓரே சீராக இருக்கும்
  9. காய்கனிகள் நல்ல தரமானதாகவும் சுவை மிகுந்தும் காணப்படும்
  10. விரைவில் கெட்டுப்போகாது சந்தையில் நல்ல விலை கிடைக்கும்
ஆட்டு எருவை பயன்படுத்தும் முறை:

விவசாயம் சாகுபடி செய்வதற்கு முன்பே ஆட்டு கிடை நிறுத்தி அதன் பிறகுதான் விவசாயம் செய்வார்கள் ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படும்.

ஆட்டுகிடை வைக்க முடியாத நிலையில் ஆடுகள் வைத்திருப்பவர்களிடம் ஆட்டு எரு ஒரு பை 25 கிலோ இருக்கும். விலை 50 ரூபாய் சொல்வார்கள் அவற்றை நாம் வாங்கி வந்து நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும்.

தயாரிக்கும் முறை:

நன்றாக பொடி செய்த ஆட்டு எரு 100 கிலோ
அசோஸ்பைரில்லம், 5 கிலோ
பாஸ்போபாக்டீரியா 5 கிலோ ,
டிரைக்கோடெர்மா விரிடி, 2கிலோ
சூடோமோனஸ் 2 கிலோ
அரைக்கிலோ நாட்டு சர்க்கரை
முதலில் ஆட்டு எருவை நன்றாக நொருக்கி பொடிசெய்து அவற்றில் உயிர்உரங்களைகொட்டி கலந்து வைக்க வேண்டும்.

பிறகு நாட்டுச் சர்க்கரையை தண்ணீர் விட்டு கரைத்து கலந்து வைத்துள்ள எருவில் ஊற்றி நன்றாக கலக்கி புட்டு பதம் வந்தபிறகு நிழலில் கோணி சாக்கு அல்லது தென்னை ஓலை கொண்டு மூடிவிடவும்

அதன்பிறகு ஒருவாரம் கழித்து எடுத்து பயன்படுத்தலாம். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வயல் ஈரமாக இருக்கும் சமையத்தில் எடுத்து வாய்க்காலில் தூவிவிடவும்.

பொதுவாக மாட்டு எரு மறு வருடம்தான் பலன் கொடுக்கும் ஆனால் ஆட்டு எரு அந்த வருடமே பலன் கொடுக்கக் கூடியது.

நாம் பயன்படுத்தும் போது முதலில் விவசாயம் செய்யும் பயிருக்கு 30 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும் அடுத்த பயிருக்கு 70 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும்.

Brittoraj /

2 Responses to “விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்”