இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது.
தமிழக ஆடு இனங்கள்

Learn Share Collaborate
இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது.
இதில் பட்டம் என்பது காலநிலையை குறிப்பிடுவதாகும்.
காலநிலையைப்பொறுத்து விவசாயம் செய்வது, நமது மரபு விவசாயத்தில் மிகவும் முக்கியமானது.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம் என்று தமிழ் மாதங்களைக் கணக்கிட்டு பட்டத்திற்கு ஏற்றவாறு விதைக்கவேண்டும்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன செடிகள் விதைக்க வேண்டுமோ, அந்தந்தப்பட்டத்தில் அந்தந்த செடிகளை விதைப்பார்கள்.
பட்டம் பார்த்து விதைப்பதன் மூலம் இயற்கையாகவே பூச்சிகளைக்கட்டுப்படுத்தலாம். விளைச்சலும் மிக அருமையாக இருக்கும்.
பிப்ரவரி – (தை,மாசி) : கத்திரி,தக்காளி,மிளகாய்,பாகல்,வெண்டை,சுரை,கொத்தவரை,பீர்க்கங்காய், கீரைகள்,கோவைக்காய்.
மார்ச் – (மாசி,பங்குனி) : வெண்டை,பாகல்,தக்காளி, கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய்.
ஏப்ரல் – (பங்குனி, சித்திரை) : செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
மே – (சித்திரை,வைகாசி) :செடி முருங்கை, கொத்தவரை, கத்திரி, தக்காளி.
ஜூன் – (வைகாசி, ஆனி) : வெண்டை,கத்திரி, தக்காளி, கோவை,பூசணிக்காய், கீரைகள்.
ஜூலை – (ஆனி,ஆடி): மிளகாய், பாகல்,சுரை,பூசணி,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை,தக்காளி, கொத்தவரை.
ஆகஸ்டு – (ஆடி,ஆவணி): மிளகாய், பாகல்,சுரை,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை.
செப்டம்பர் – (ஆவணி,புரட்டாசி ): செடிமுருங்கை,கத்திரி, பீர்க்கங்காய்,பூசணி, முள்ளங்கி,கீரைகள்.
அக்டோபர் – (புரட்டாசி,ஐப்பசி ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி.
நவம்பர் – (ஐப்பசி,கார்த்திகை ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி,தக்காளி, பூசணி.
டிசம்பர் – (கார்த்திகை,மார்கழி ): கத்திரி, சுரை,மிளகாய் முள்ளங்கி,தக்காளி, பூசணி.
பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
இந்த இட்டேரி என்பது “ஒரு தனி உலகம்.” இதை நான் “Itteri eco-system” என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.
இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.
சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள், முதலில் அவற்றின் வகைகளையும், ஒவ்வொரு வகையின் சத்துக்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை.
இயற்கை முறையில் விளைஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்விக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்
சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்: இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள உணவு முறைகள் மாத்திரை சாப்பிடுபவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டியவை. இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கு வேறு ஒரு உணவுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. எனவே அதை முதலில் கடைபிடித்து, ஊசி மருந்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்து மாத்திரை போடும் நிலைக்கு வந்த பின்னர், இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகளைக் கடைபிடிக்கவும்.