Month: January 2019

சாய்வு கூரை பற்றி லாரி பெக்கர்

கடந்த 20-30 ஆண்டுகளாக மக்கள் “நவீன வீடுகளின்” மேல் நம்பிக்கை மேலும் மோகம் கொண்டு உள்ளனர். அனால் “நவீன வீடுகளின்” கூரை வடிவமைப்பு வீட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கடும் வெயில் காலத்தில் வீட்டின் உட்புறம் “கடும் வெப்பமாகவும்”, குளிர்/மழை காலத்தில் வீட்டின் உட்புறம் “கடும் குளிராகவும்”, காற்றோட்டம் இல்லாமல் உள்ளது.

Continue reading

பாசனம் தேவைப்படாத குழிநுட்பம்

பாசனம் தேவைப்படாத குழி நுட்பம்

வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு.

Continue reading

தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர்

இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு முன்னுதாரணமான கட்டிடங்களை உருவாக்கினார்.

அவர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் வலுவுடன் அவரது கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன. அவர் குறித்தும் அவரது கட்டிடக் கலை அனுபவங்கள் குறித்தும் அவரது மனைவி எலிசபெத் பேக்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் தான் “பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு”

நம்ம ஊர் சந்தையில் நூல் அறிமுகம்:

சூழலுக்கிசைவாய் மனித மனங்களை நகரச் செய்ய சந்தையில் புத்தகங்கள் வாயிலாகவும் வழி காணும் சிறு செயலாய் ,
இம்மாதம்
எலிசபெத் பேக்கர் எழுதி,
மருத்துவர்.வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்து
தடாகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள

பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு
புத்தகம்.
சூழலை அழிக்காமல் வாழ்விடத்தை உருவாக்கும் மரபுக் கட்டிடக்கலை பற்றிய புத்தகம்.

அறிமுகம் செய்பவர்
கு. பாலமுருகன், நூலகர்
GRD கல்லூரி.

புத்தக வாசிப்பாளர்கள், மரபுக் கட்டிடக்கலை பற்றி அறிய விரும்புவோர் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
நம்ம ஊரு சந்தை – Namma Ooru Sandhai

உயிராற்றல் விவசாயம்

உயிராற்றல் விவசாயம் உயிர்சக்தி விவசாயம்

உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது

Continue reading

சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா

சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா

தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப் பதிவு செய்து அதனைக் குத்தகை ஒப்பந்த படி (contract farming) TNPL சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

Continue reading

பயோ என்சைம் லிக்விட்

பயோ என்சைம் லிக்விட்

இதுவொரு Multi Purpose Liquid.

முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக.

Continue reading