‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து நடவு’ என்று பெயர். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.
போத்து முறை மரம் நடவு
