ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.
ஆத்தி மரம் இடிதாங்கி மரம்
