ஒமேகா 3 உள்ள பருப்பு கீரை
Omega-3s are a class of polyunsaturated essential fatty acids.
நமது வயலில் களை என்று சொல்லப்படுகின்ற பருப்பு கீரையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள். ஒமேகா 3 உள்ள சில தாவரங்களில் இது முதன்மை பெற்றது. இது ருசியாகவும் இருக்கும்.
சமீப காலம் வரை இதை பற்றிய ஆராய்ச்சிகளில் முதன்மையாக இதை எப்படி ஒழித்து கட்டுவது என்பதாகவே இருந்தது. ஆனால் பருப்பு கீரையை “ஒழித்து கட்ட” சிறந்த வழி இதை உண்பதே.


மிகவும் ருசியான இந்த கீரையை ஒரு முறை சமைத்து உண்டு விட்டால் பிறகு இதற்கு நீங்கள் அடிமை ஆகிவிடுவீர்கள்.
இது சற்றே புளிப்பு சுவையுடன் இருக்கும். வேகவைத்தும் மற்றும் கீரை பொறியலாகவும் உண்ணலாம்.
ஒரு கப் பருப்பு கீரையில் 25 மில்லிகிராம் வைட்டமின் C உள்ளது. இது நமது தினசரி தேவையில் 20% ஆகும் .
ஸ்டீம் செய்து வேக வைத்து அல்லது பச்சையாகவே சாலட் மற்றும் சாண்விச் உடன் சாப்பிடலாம்.
இது ஒரு சாதாரண கீரையாக இருந்தாலும் இதில் உள்ள சத்துக்களை பட்டியல் இடுகிறேன்
1. வைட்டமின் E (பசலை கீரையில் உள்ளதை விட ஆறு மடங்கு உள்ளது)
2. வைட்டமின் C
3. ஒமேகா-3 பேட்டி ஆசிட் – ஆல்பா லினோலெனிக் ஆசிட் (ALA)
4. பீட்டா கரோட்டீன் (கேரட்டை விட ஏழு மடங்கு உள்ளது )
5. மெக்னீசியம்
6. ரிபோபிளவின்
7. பொட்டாசியம்
8. பாஸ்பரஸ்
நமது உடலில் உற்பத்தி ஆகாத சில சத்துக்களில் இந்த fatty ஆசிட்டிகளும் அடக்கம் . நாம் உணவின் மூலமே இதை சமன் செய்ய முடியும் . நமது சைவ உணவில் மிகவும் குறைந்த அளவே நாம் ஒமேகா 3 உள்ளது . ஒமேகா 3 குறைபாட்டால் இதய நோய்கள் , கேன்சர் , அல்சைமர் மறதி நோய் முதலியன உண்டாகிறது .
ALA எனப்படும் ஆல்பா லினோலெனிக் ஆசிட் , முட்டை மற்றும் இறைச்சி உட்கொள்வதால் நமக்கு கிடைக்கிறது. ஆனால் பருப்பு கீரையில் மற்ற தாவரங்களில் உள்ளதை விட 15 மடங்கு அதிக ALA உள்ளது.
ALA மட்டும் அல்ல, மற்ற ஓமெகா 3s ஆசிட் EPA (eicosapentaenoic acid ), DHA (docosahexaenoic acid ) போன்றவையும் இதில் உள்ளது.
பருப்பு கீரை – purslane (Portulaca sativa) or garden purslane (Portulaca oleracea)
Tamil: கோழிக்கீரை koli-k-kirai, பருப்புக்கீரை paruppu-k-kirai, Pulli-keerai