நாட்டு மாட்டின் அவசியமும் நன்மையும்

நாட்டு மாட்டின் அவசியமும் நன்மையும்

நாட்டு மாட்டின் அவசியமும், நன்மையும்

♦ நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும். தானாக பால் சொரிந்ததை போன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்.

♦ இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம் மற்றும் தொண்மை இதனால் அழிகிறது.

♦ அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

♦ நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை(கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது).
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை.

♦ கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடான மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது.

♦ கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது.

♦ இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது.
பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது.

🔥 இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.
ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது.

🔥 இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது.
தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars).

⭐ இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்?

♦ நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது.

♦ இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல.

♦ இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

♦ இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.

♦ முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான்.

♦ நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம்.
திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம்.

♦ இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

⭐ நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லைஎனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள்.

♦நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால்ன்னு பல வகைகள் இருக்கு.

🔥 ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறாங்க.

♦ நாட்டு மாடுங்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும்,
பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவிச்சிக்கிட்டு வருது.

♦ ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.

♦ ஜெர்சி இன மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாம அயல்நாட்டு இன மாடுகளோட சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல.

⭐ இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

♦ இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமா கொடுக்கிற ஒரே காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியா முழுவதும் விவசாயிங்க வளர்த்துட்டு வர்றாங்க.

♦ தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிந்து போய்விட்டது என்பது குறிப்பிடதக்கது…