மழையை அறுவடை செய்ய

மழையை அறுவடை செய்ய பண்ணைக்குட்டை அமைத்தல்

 

மழையை அறுவடை செய்ய பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் சம உயர வரப்பமைத்தல், குழி எடுத்து வரப்பமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் மூலமாக அவசியம் சேமிக்க வேண்டும்.

அன்புள்ள விவசாய சொந்தங்களே

இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும்.

அவ்வாறு சேமிப்பது மண்ணில் ஈரப்பதத்தை அதிகரித்து நுண்ணுயிர் நிலைப்பாட்டை இழக்காமலிருக்கவும் அடுத்து வரும் சித்திரை அல்லது ஆடிப்பட்டத்தில் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமானது.

அதற்கு கீழ்கண்ட மண்வளப் பாதுகாப்புப் பணிகளை தற்போது அனைத்து வகை நிலங்களிலும் செய்ய வேண்டும்.

1.சம உயர வரப்பமைத்தல்
2. குழி எடுத்து வரப்பமைத்தல்
3.பண்ணைக்குட்டை அமைத்தல்

இம் மழையை உரிய வகையில் அறுவடை செய்ய இப்பணிகளைக் *காலம் தாழ்த்தாமல்* உடன் செயல்படுத்தலாம்.இதற்கான செலவு என்பது எதிர்கால விவசாயத்தை மேம்படுத்துவதற்கான அல்லது நிலக் கட்டமைப்பை உயர்த்துவதற்குப் பயன்தரும். பயனற்றதாக நினைக்க வேண்டாம்.

இதனை செயல்படுத்துவதில் விபரம் தேவைப்படின் உடன் அழைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு
9944450552.